Thursday, December 29, 2011

வேலாயுதம் - விஜய்க்கு தேவை தம்.


விஜய் நடிப்பில், ரீமேக் ராஜா இயக்கத்தில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க  வெற்றிவாகை சூடியிருக்கும் latest விஜய் படம் வேலாயுதம் (ஏழாம் அறிவு மொக்கயானதால்). முதல் காட்சியில், என்னடா இது, தியேட்டர் மாறி கேப்டன் படத்துக்கு வந்துட்டமோன்னு ஒரு பீலிங். Yes , பனிமலை பயங்கரவாதிகள் தமிழகத்தை தாக்க திட்டம், அதுக்கு உதவப்போவது, தமிழகத்தின் உள்துறை அமைச்சர். கேப்டன் இருந்திருந்தா கிண்டி கிழங்கெடுதிருப்பார். பாவம் விஜய், கொஞ்சம் தெனருகிறார்.

அந்த உள்துறை அமைச்சரின் கட்டளைப்படி சென்னையில் வெடிகுண்டு வைக்க திட்டமிடும் சமூக விரோதிகளை, Freelancing journalistஆன ஜெனீலியாவும், அவரது நண்பர்களும்,  ரகசிய படம் பிடிக்கும்போது சிக்கிகொள்கின்றனர். அதில் ஏற்படும் களேபரத்தில், ஜெனிலியா பலத்த காயம் அடைய, அவரது நண்பர்கள் கொல்லபடுகின்றனர். சில அடியாட்கள் தற்செயலாக செத்து மடிய, காயம் பட்ட ஜெனிலியா, இவர்களது திட்டத்தை தற்காலிகமாக தடுப்பதற்காக, "இனி வெடிக்க இருக்கும் வெடிகுண்டுகளையும் தடுப்பேன்" என்றும், "இதற்க்கு பின்னால் இருப்பவர்கள் கதியும் இனி இப்படிதான் ஆகும்,  இப்படிக்கு வேலாயுதம்" என்றும் வெள்ளைத்தாளில் எழுதி இறந்த சமூக விரோதிகள் அருகில் வைத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிடுகிறார். இது தமிழகம் முழுவது பரபரப்பாகிறது, யாரந்த வேலாயுதம், யாரந்த வேலாயுதம் என்று மீடியாக்கள் பரபரக்க எங்கள் அண்ணன் விசய்  intro.

கிராமத்தில், ரயிலை வழிமறித்து நிறுத்தி, தங்கை, கொழுக் மொழுக் கொழுக்கட்டை ஹன்சிகா மற்றும் பல உறவினர்களுடன், ஊர்மக்கள் ஆர்பரிக்க சென்னைக்கு ரயிலேருகிறார் தலைவர் வேலாயுதம் விஜய் . இனி என்ன? இந்த வேலாயுதம் அந்த வேலையுதமாவது தான் கதை. ஆடல், பாடல் என்று typical விஜய் பட கலகலப்பிற்கு பஞ்சமில்லாத முதல்பாதி. ஹன்சிகா, சந்தானம், போன்றோர் உதவியுடன் சலிக்காமல் செல்கின்றன காட்சிகள். அபூர்வ சகோதரர்கள், "உன்னை நெனச்சேன்,  பாட்டுபடிச்சேன்" பாடல் பின்னணியில், பாஸ்கர் மண்டிபோட்டு நடக்க, சந்தானம் கலாய்ப்பது நல்ல நகைச்சுவை.  ஆனால், இந்த தெலுங்கு வில்லன், பயங்கரவாதிகள், போன்ற வழக்கமான கதை தான் நம்மை கொட்டாவி விட வைக்கிறது. மன்னர் செங்கிஸ்கான் பொருட்காட்சி என்று எங்கோ சென்று, அங்கு துரத்தும் போலீசிடம் சிக்காமலிருக்க மன்னரின் உடையை அணிந்து வரும் விஜய், பார்ப்பதற்கு பாதாள சாக்கடையில் பெருச்சாளி புடிப்பவன் போலவே இருக்கிறார்.

மற்றபடி, வில்லன்களை எப்படியும் விஜய் துவைத்தெடுத்து தமிழகத்தை காப்பாதிவிடுவார் என்பது பச்சை குழந்தைக்கு கூட தெரிந்த விஷயம்.  பயங்கர வாதிகளை பிடித்து கொடுத்தபின் விஜய் ஊர் திரும்புகிறார். படம் முடியபோகுது எல்லாரும் வீட்டுக்கு போகலாம் என்று நினைக்கையில், "படம் இன்னும் முடியல எல்லாம் உக்காருங்க" என்கிறார் திருவாளர் ரீமேக் ராஜா. (இந்த இடத்தில "இனி விஜய் ரசிகர்கள் மட்டுமே இங்கே இருக்கலாம் மற்றவர்கள் கெளம்பலாமென்று ஒரு டைட்டில் போட்டிருக்கலாம்".) தப்பிய பயங்கரவாதிகளில் ஒருவன், தங்கையின் நிச்சயத்தில் வெடிகுண்டு வைக்க, தங்கை மரணம். அதன் பின் விஜய் வெகுண்டெழுந்து MA சிதம்பரம் stadium  சென்று வில்லர்களை மக்கள் முன்னிலையில் துவம்சம் செய்து, மந்திரியை மண்ணோடு மண்ணாக்குகிறார். சட்டையில்லாமல் தன் புஜ பலத்தை காட்டி சண்டையிடுகிறார். "What a Man" என்று சொல்ல அப்பாஸ் இல்லாதது மட்டும்தான் குறை. நம் மண்டை காய்ந்து முடி கொட்டி வழுக்கை தலையுடன் தான் தியேடரிளிருந்து வெளிவரவேண்டுமென்பது ரீமேக் ராஜாவின் விருப்பம்போல.

விஜய் தன் படத்தை பார்ப்பதற்கு அவருக்கே அழுப்பு தட்டாமல் இருப்பது தான் ஆச்சர்யம். இனியாவது விஜய் கொஞ்சம் தைரிமாக, பூவே உனக்காக, Friends, வசீகரா, காவலன் போன்ற நல்ல படங்கள் நடித்தால் மக்களுக்கு நன்று.

Overall, It 's  a Tipical Vijay Movie !

கவுண்டர் காதில் ரத்தம் வழிய வழிய அழுதுகொண்டே: டேய் வண்டுருட்டான் தலையா ஏண்டா சொல்லல?
செந்தில்: அண்ணேன்..........
கவுண்டர்: டேய் பச்செள புடுங்கி,  ஏண்டா சொல்லல?
செந்தில்: அண்ணேன்.......... வந்து...
கவுண்டர்: டேய் கப்ளிங் வாயா... அப்பைலருந்து அண்ணேன் அண்ணேன்னு சொல்றியே, உள்ள பெருச்சாளி புடிக்கிறவன் இருக்கான்னு ஏண்டா சொல்லல?
செந்தில்: அது இல்லைன்னேன், நீங்க வந்து...பாத்துட்டு ஒரு முடிவெடுப்பீங்கன்னு.........
கவுண்டர்: வந்து பாத்துட்டு, உள்ளயே body ஆகிருவான், இவன் பொண்டாட்டிய இழுத்துட்டு ஓடிரலாம்னு பிளான் பண்ணுனியா?
செந்தில்: இதுக்கு எவளோ செலவானாலும் பரவல்ல, நீங்களே ஒரு பைசல் பன்னிவுடுங்கண்ணேன்.
கவுண்டர்: அடிங்க நரிவால் தலையா...... இவ்வளவு நடந்தும் நீ, அதுலயே தான் குறியா இருக்கியா.......கம்முனாட்டிபலே

கதை: மொக்கை கதை
திரைக்கதை: பரவாயில்லை
வசனம்: பரவாயில்லை
இயக்கம்:பரவாயில்லை
பின்னணி இசை: சொல்வதர்க்கொன்றுமில்லை
பாடல்கள்: சுமார்
ஒளிப்பதிவு
: நன்று

Wednesday, December 21, 2011

இன்னும் எத்தனை?

ஐந்து வருடங்கள் விளையாடினோம்...
18 வருடங்கள் படித்தோம்,
பணிசெய்கிறோம், இன்னும் எத்தனை வருடங்கள்?

தாய், தந்தை..
அண்ணன், தம்பி...
அக்காள், தங்கை...
மனைவி, குழந்தை...
இன்னும் எத்தனை உறவுகள்?

நாட்கள் பறக்கின்றன...
மாதங்கள் கடக்கின்றன...
வருடங்கள் நகர்கின்றன...
இன்னும் எத்தனை காலம்?

Friday, December 16, 2011

கொல்லிமலை சிங்கங்கள் - 2

நாங்களும் trucking போனோம், trucking போனோம், trucking போனோம்!

கோவில் பக்கத்துல சில cottages இருக்கும், so இப்ப அந்த கோவிலுக்கு போகணும். அடுத்து நாங்க பாக்குற ஆள் கிட்ட கோவிலுக்கு போறது எவ்வளவு தூரம்னு கேக்கணும். டவுசர் கிழிய நடந்து வந்ததால், எல்லாரும் செம tired .

பாதை மாறிய பதர்கள்

தார் ரோடு போர பாதையிலேயே நடக்க ஆரம்பிச்சோம், ஒரு கால் கிலோமீட்டர் நடந்த அப்புறம் ரோட்டிலருந்து இடதுபுறமா, கொஞ்ச தூரத்துல 2 பேர் நின்னு மரம் வெட்டிகிட்டு இருந்தாங்க. நாங்க ரோட்டை விட்டு செம்மண் ரோட்ல எறங்கி, அவங்க கிட்ட வழி கேக்க போனோம். 55 வயசு மதிக்க தக்க ஒருத்தர் ஒரு சின்ன மரத்த அருவாளால வெறகுக்காக வெட்டிகிட்டு இருந்தார், ஓர் 25 வயது மதிக்கத்தக்க ஒருத்தர் லுங்கியோட அவர்கிட்ட பேசிட்டிருந்தார். நாங்க அவங்கள நெருங்கவே, அவங்க பேசுறத நிறுத்தி விட்டு, "என்ன தம்பியளா இந்த பக்கம்? கோவிலுக்கு போறீயளா" என்றார் அந்த பெரியவர். "ஆமாங்க, இங்கிருத்து கோவில் எவளவு தூரம்" என்றோம். "4 கிலோமீட்டர் இருக்கும் தம்பி" என்றார். கூட இருந்த லுங்கி partyயோ "ரோடு வழியா போனா 4 கிலோமீட்டர். இப்புடியே காடுவழியா குறுக்க போனா ரெண்டு, ரெண்டரை கிலோமேடர்ல கோவில் வந்திரும்"னு சொன்னார். அதுக்கு அந்த பெரியவர், "எலே கூறு கேட்ட பயலே, யார காட்டு வழியா போக சொல்லுறே" என்று கையில இருந்த அருவாளை ஓங்கிவிட்டு, "தம்பி நீங்க ரோட்டு வழிய போங்கப்பா" என்றார், "அட பாவிகளா, அந்த கரடிகிட்ட இருந்து தப்பிச்சி வந்து இந்த ரெகுடிகிட்ட மாட்டிகிட்டோமே" என்று நெனச்சிகிட்டிருந்தேன். அப்போது சோமு "ஏங்க நாங்க இந்த மலை மேலயே காட்டு பாதை வழியா நடந்து வந்துட்டோம், இதுல போறது என்ன அவ்வளவு கஷ்டமான்னு", ரோட்டில் போன பக்கிகளை, காட்டுக்குள் இழுத்து விட்டான், சுந்தரோ "ஆமா.. ஆமா.. 20 கிலோ மீட்டர் மலை பாதைல வந்தாச்சி, இன்னும் வெறும் 2 km காட்டு பாதைல போக முடியாதா?", தன் பங்குக்கு ஏழரை கூட்ட.. ஜகன், "நான் என் friends கூட பல தடவ இந்த குறுக்கு வழில தான் போயிருக்கேன்" என்றான். அந்த பெரியவர், "சரி அப்ப இப்படியே குறுக்கால சூரியன பாத்தே போங்க, ஆனா வெரசா போகணும், சூரியன் மறஞ்சு போச்சின்னா அம்புட்டுகிருவீங்க, கையில battery light ஏதும் இருக்கா" என்றார், நாங்க எல்லாரும் ஜகனிடம் இருக்கா என்று கேட்க ஜகன் உதட்டை பிதுக்கினான். ஆபத் பாண்டவன், அனாத ரட்சகன் எங்கள் ராஜேஷ், "don 't worry I have a torch லைட்" என்றான். "அப்ப சீக்கிரமா போங்க" என்று அனுப்பி வைத்தார் அந்த பெரியவர். எனக்கும் ராஜேஷுக்கும் 'மீண்டும் காடா' என்ற பீதி இருந்தாலும் 4 கிலோமீட்டர் நடப்பது குறையுமே என்று சபலத்தில் காட்டுக்குள் நடந்தோம்.

ராஜேஷின் BHEL Pen Torch

மணி 6 :15 இருக்கும், நடக்க ஆரம்பித்து ஒரு 20 நிமிடங்களில், அடர்ந்த காடு எங்களை சூழ்ந்து கொண்டது, ஒரே ஒரு ஒத்தயடிபாதை, ரெண்டுபக்கமும் சில இடங்கலில் புல்லும், சில இடங்களில் அடர்ந்த மரங்களும் இருந்தது. அனகோண்டா படத்துல வர்ற சூனிய காடு மாதிரியே இருந்துச்சி. சூரியன் நாங்க எதிர்பார்த்தத விட வேகமா மறைய ஆரம்பிச்சது. சூரியன் இப்போ Red கலர் Rayban glassக்கு மாறியது போல, வானம் செந்நிறமானது. மணி 6 :45 இருக்கும், ஒரு இடத்துல ஒத்தயடி பாதை மூன்றாக பிரிஞ்சுது, எந்த வழில போறதுன்னு ஒரு குழப்பம். அந்த பெரியவர் சூரியனை பாத்தே போங்கன்னு சொன்னதனால சூரியனை தேடினோம், ஆனா சூரியன காணோம். எங்கயோ பொய் மறஞ்சுகிட்டு எங்களை dealil விட்டது. ஜகன் சொன்னான்," அந்த அரப்பலீஸ்வரர் மேல பாரத்தை போட்டுட்டு straightaa நடப்போம்"னு. சுந்தர் முகத்தில் பதட்டம், என் வயிற்றில் பிரட்டல், ராஜேஷ் pant lighta wet. சோமுவும் ஜெகனும் எங்களை வழி நடத்த ஆரம்பித்தனர். இருள் எங்களை சூழ ஆரம்பித்தது, அடுத்த 10 நிமிடங்களில் மைபூசிய வானத்தில் வெண்ணிற போட்டு வைத்ததுபோல் சந்திரன், எங்கள் கண்களுக்கு சிறிது வெளிச்சம் கொடுத்தது. அப்போது தான் ராஜேஷின் torch lightai வெளியில் எடுக்க சொன்னோம். ராஜேஷும் எடுத்தான், அதை பார்த்த உடன் மீண்டும் எங்களுக்கு அதிர்ச்சி. என் ஆள்காட்டி விரல் சைசிளிருந்த ஓர் pen torch. அதுவும் ராஜேஷின் அப்பாவிற்கு BHELல் ஓசி கொடுத்தது. அந்த torchஐ பார்த்த உடனே நான் முடிவு பண்ணிட்டேன் 'நாம இன்னக்கி கழுதபுலி கடிச்சி தான் சாகப்போரோம்'னு. அவன வாயில வந்ததெல்லாம் சொல்லி திட்டி புட்டு இப்ப என்ன பண்ணலாம்னு யோசிச்சோம். மணி 7 :15 இருக்கும், காட்டுக்குள் ரொம்ப தூரம் வந்தாச்சு, இனி திரும்பி போனாலும் ரொம்ப நேரமாகும், கைல இருந்த என்னோட NOKIA 2100ல நல்ல வெளிச்சம் வரும், அத வச்சி எப்புடியாவது சமாளிச்சி போயிரலாம்னு முடிவு பன்னி, ஜகன் கையில் வெளிச்சத்துக்கு cellphone குடுத்துட்டு திரும்ப one by one , first ஜகன், next சோமு, next me, next ராஜேஷ், next சுந்தர் இந்த வருசைல ஒருவன் பின்னாடி ஒருவன் இருட்டுல நடக்க ஆரம்பிச்சோம். முன்னாடி இருந்து அனகோண்டா வந்தாலும், பின்னாடி இருந்து டைனாசர் வந்தாலும் முதல்ல என்னைய கடிக்காது, sidela இருந்து வந்து அலலைல கடிச்சா மட்டும்தான் எனக்கு ஆபத்து, அதுக்கு வாய்ப்பு கம்மிங்கறதால I chose the middle spot. துன்பம் ஒருவனுக்கு தொடர்ந்து வந்தால் அவனுக்கு பயம் நீங்கி வாழ்க்கை மரத்து போயிரும்னு கேள்விபட்டிருப்பீங்க, அந்த நிலையில தான் நான் இருந்தேன். இனி எப்படியும் வீட்டுக்கு பொய் சேர போறது இல்ல, சாகுறது சாகப்போறோம், அஞ்சு பேர்ல நாம தான் கடைசியா வீர மரணம் அடையணும்னு முடிவு பண்ணி, நடந்துட்டிருந்தேன்.

தகிலின் உச்சம்

பசி, இருட்டு, கரடு முரடான ஒத்தயடி பாதை, திகிலூட்டும் அமைதி, அப்ப அப்ப கேட்டு அடங்குர நரி ஓலம் வேற. எங்கள சுத்தி என்ன என்ன மிருகங்கள் எங்கள வெச்சி dinnerkku பிளான் பண்ணிக்கிட்டு இருக்குன்னு தெரியாம போயிட்டிருந்தோம். பசிக்கிதுன்னு எவன்ட்டயாவது சொன்னா, இந்த மரண போராட்டத்துல உனக்கு சோறு கேக்குதான்னு திட்டுவானுங்க, அதுனால என்னோட backpackஅ frontpackaஅ மாத்தி, உள்ள வெச்சிருந்த பிரட் packeta ஓபன் பன்னி, யாருக்கும் தெரியாம மொசுக்க ஆரம்பிச்சேன். பாதையில் ஒரு தடங்கல், திடீர்னு பாதை பாறைகளாக படி படியாக கீழே இறங்க ஆரம்பித்தது, ஒரு நான்கு, ஐந்து படிகள் இறங்கியதும் மீண்டும் சம வெளி. சமவெளியில் ஒரு குன்று, குன்றிலிருந்து தாவிவரும் ஒரு நீரோடை, என்ன அருமையான ஒரு location . ஆனால், discovery, animal planet போன்ற cannelஅ எல்லாம் காட்டுக்குள்ளே, தண்ணி இருக்க இடத்துக்கு பக்கத்துல தான் எல்லா மிருகங்களும் சுத்திக்கிட்டிருக்கும்னு அதுல பலதடவ கிலிய கெளப்பீருக்கானுங்க. so , வேக வேகமா அந்த ஒடைய முட்டியளவு தண்ணிக்குள்ள இறங்கி கடந்து மீண்டும் கரைக்கு வந்து, மெல்ல மெல்ல இறங்கியது போலவே படிகள்ள ஏறி மீண்டும் மரங்கள் நிறைந்த பகுதிக்கு வந்தோம். இப்படி திகிலோட அரை மணிநேரம் கடந்தது. எங்கள் வெற்றி பயணத்தில் மீண்டும் ஒரு சோதனை, அங்க திரும்பவும் இரண்டு பாதை பிரிஞ்சது, இப்ப எந்த பாதையில போரதுன்னு திரும்ப குழப்பம். ஒரு பாதை நேராகவும், இன்னொரு பாதை, வலது புறமா கொஞ்சம் மேல் நோக்கியும் போனது. இனியும் இத தொடர்ந்தால், கண்டிப்பாக விபரீதம் தான் என்று எல்லாரும் சேந்து ஒரு முடிவு எடுத்தோம். சுந்தர், சோமு, ராஜேஷ் மூணு பெரும் இப்ப நிக்கிற அதே இடத்துல ஒருத்தன் கைய ஒருத்தன் புடிச்சிகிட்டு, அங்கேயே நிக்கணும், நானும் ஜெகனும், வலதுபுறமா போர பாதையில கொஞ்சதூரம் cellphoneனோட போய் ரோட்டுபக்கம் ஏதும் இந்த பாதை போய் சேருதானு பாத்துட்டு வரதாவும் plan பண்ணி கெளம்பினோம். இவ்வளவு தூரம் நான் தானே முன்னாடி போனேன், இப்ப நீ முன்னாடி போடான்னு ஜகன் என்ன பலிகடா ஆக்கிட்டான், சரி ஏற்கனவே பாதி உயிர் போயிரிச்சு இனி பாதி தானே, போனா போகட்டும் போடான்னு நானும் தைரியமா முன்னாடிப் போனேன். கெளம்பின இடத்தில இருந்து ஒரு நிமிட ஏற்றதுல மேல நின்னு பார்த்தோம், கீழ பசங்க நிக்கிறதே எங்கள கண்ணுக்கு தெரியாத அளவுக்கு இருந்தது. அந்த பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எந்த வெளிச்சமோ, ரோடோ தெரியல. தொடர்ந்து கொஞ்ச தூரம் போய் பாகவானு கேக்கலாம்ன்னு நான், "சுந்தர்"னு கத்தினேன், அவன், "எங்கடா இருக்கீங்க"ன்னு கத்தினான், இங்க இருக்கோம்னு செல்போன தூக்கி ஆட்டி காட்டினேன், அதற்க்கு சுந்தர், "இங்க ரொம்ப பயமா இருக்கு ஒண்ணுமே தெரியல நீங்க போக வேண்டாம் சீக்கிரம் கீழ வந்திருங்க எதா இருந்தாலும் சேந்தே போவோம்"னு சொன்னான். சரின்னு ரெண்டுபேரும் கீழ இறங்கி வந்துட்டோம்.

Reverse Gear

எல்லாரும் ஒன்னுகூடி, திரும்பி போயிறலாம், இனியும் வனத்தோட ஆழத்தை நாம சோதிச்சி பாத்தா அது நம்ம முட்டாள் தனம்னு முடிவு பன்னி, வேர வழியே இல்லாம reverse gearil வந்த பாதையில திரும்ப நடக்க ஆரம்பிச்சோம். அதுல என்ன சிக்கல்னா. மீண்டும் அந்த ஒடைய கடக்கணும், ஒரு தடவ அத கடக்கும்போதே எந்த மிருகம் எங்க படுத்திருக்கு, முதலை இருக்கா, பாம்பு இருக்கானு தெரியாம தப்பி பொழச்சி வந்தோம், இப்ப திரும்ப அத கடக்குறது தான் மிக பெரிய survival challengeஅ இருந்தது. இந்தமுறையும் கீழிறங்கி, ஒருவர் பின் ஒருவராக கைய புடிச்சிகிட்டு முழங்கால் அளவு தண்ணீர் இருந்த ஓடையை கடந்து மேலேறி, உயிர்பிழைத்து வந்தோம். இதுக்கப்புறம் நாங்க ஏற்க்கனவே நடந்து வந்த பாதைங்கறதால, வேகமா நடக்க முடிஞ்சது. கொஞ்சம் நல்ல வேகமாகவே நடந்தோம். நான் மீண்டும் என் breadஐ மொசுக்க ஆரம்பிதேன். ஒருமணிநேரம் நடந்த இடத்தை நாங்க திரும்பி வரும்போது 20 நிமிடத்திலேயே அடைஞ்சிட்டோம். இப்ப நாங்க first குழம்பின அதே இடம், மூன்று பாதை பிரிஞ்சு எங்கள வறுத்து எடுத்ததே அதே இடம். எங்கிருந்து வந்தோம்னே எங்களுக்கு தெரியல. சரி இந்த மூணு பாதையுமே இனி காட்டுக்குள்ள போகல எதோ ஊருக்குள்ள தான் போகுதுன்னு உறுதியா தெரிஞ்சனால, ஏதோ ஒரு பாதையில நடந்தோம், கொஞ்ச நேரம் நடந்த பிறகு, இது கண்டிப்பா நாம வந்த பாதை இல்லை, இது வேர பாதைன்னு நல்ல தெரிஞ்சாலும் நடந்தோம், நடந்தோம் நடந்துகேட்டே இருந்தோம்.

வழிகாட்டிய வள்ளல்

கடைசியாக ஒரு கண்கொள்ளா காட்சி. தூரத்தில் ஒரு ஒத்தை கூரை வீடு, அதில் மஞ்சள் குண்டு bulp . வீட்டுக்கு பின்புறமா இருந்து ஒரு முன்டாசுகட்டிய மனிதன் எங்களை கவனிக்க. நாங்கள் அவரை நோக்கி ஓடினோம். அவர் எங்களை நோக்கி நடந்து வந்து, "என்னப்பா நீங்க, இந்த நேரத்துல காட்டுகுள்ளருந்து வரீங்க, வழிதவரீட்டின்களா" என்றார். "ஆமாங்க, நாங்க கோவிலுக்கு போக, இப்புடி நடந்து குறுக்கு பாதை வழியா போனப்ப காட்டுக்குள்ள மாட்டிகிட்டோம்" என்றோம். "எந்த முட்டா பய 6 :00 மணிக்கு மேல உங்கள காட்டுவழியா போகசொன்னவன், நாங்களே இருட்டு கட்டிரிசின்னா, ஆடு மாட கூட மேய விட மாட்டோம், நீங்க என்னன்னா சின்னபுள்ள தனமா இப்புடி வேலாண்டுகிட்டு இருக்கீங்க. சரி நீங்க மட்டும்தானா இல்லே இன்னும் யாராவது உள்ள மாட்டிகிட்டு இருக்காங்களா" என்றார். "இல்லங்க நாங்க மட்டும்தான்" என்றோம். "அந்த மரபலீஸ்வரந்தான் உங்கள காப்பாத்தி விட்டுருக்கார். உள்ள யாராவது மாட்டிருந்தாலும் அவங்களா வந்தா தான் வேற யாரும் இந்த நேரத்துல உள்ள போக மாட்டாங்க இனி காலைலதான்" என்றார். "சரி எங்களுக்கு கோவிலுக்கு போக வழி காட்டுங்க நாங்க கேளம்புரோம்னு" சொன்னோம். "கோவிலுக்கு இப்ப போய் என்ன பண்ண போறீங்க? மணி 9 :00 ஆச்சி, கோவிலும் இருக்காது ஒரு கடகன்னியும் இருக்காது. ஏதாவது சாப்டீங்களா" என்றார். எல்லாரும் "இல்லை" என்று கோரசா சொன்னாங்க. நான் மட்டும் வாயிலிருந்த bread வெளியில் தெரியாமல் அதக்கிகொண்டேன். "இப்ப என்ன பண்ண போறீங்க" என்றார்." இங்க பக்கத்துல ஏதாவது கடை இருக்கா?" என்றோம். "ரோட்டு மேல ஒரு கடை இருக்கும் , சரி வாங்க அந்த ஆள போய் பாப்போம்" என்று எங்களுடன் அவரும் துணைக்கு வந்தார். அந்த கடைல போயி, ஒரு கோத்த உள்ள விட்டுட்டு nightu ஒரு தூக்கத்தை போடலாம்னு நினைச்சோம். அங்கிருந்து அரைகிலோமீட்டர் தூரம் சீரில்லாத வயல் வெளி மற்றும், மேடும் பள்ளமுமான இடங்களிலிருந்த வீடுகளை கடந்து போய் தார் ரோட்டில் இருந்த அந்த கடையை அடைந்தோம்.

அடைக்கலம்

"இதாம்பா கடை, இருங்க வரேன்" என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு வீட்டுக்கு சென்றார். அவர் கடைன்னு சொன்ன இடத்துல ஒரு துணி துவைக்குற கல்லைதவிர வேறு எதுவும் இல்லை. போனவர் அந்த வீட்டு கதவைதட்ட, கதவ தெறக்கவே ரொம்ப நேரமாச்சி, அப்பறம் வீட்டுல இருந்து ஒருத்தர், வெளிய வந்து இவர்கிட்ட எதோ பேசி சின்ன சல சலப்பு நடந்தது. அப்பறம், இவர் எங்கள காட்டி எதோ சொல்ல அப்பறம் எங்களை அவர்கள் வீடு பக்கத்துல கூப்பிட்டு, அந்த கடை காரரும், அவர் மனைவியும் "எங்க கடைல தேன் முட்டாயும், தேங்கா பார்பியும் தான் விப்போம், உங்களுக்கு நாங்க என்ன தர்றது"ன்னு" யோசிச்சிட்டு. கணவன் மனைவி ரெண்டு பெரும், discuss பன்னி, உப்புமா செய்துகொடுத்து, night தங்க இடமும் குடுத்து அடைக்கலம் தந்தனர். காலையில் எழுந்து, உணவு, இருப்பிடம் கொடுத்த மக்களுக்கு நன்றி கூறிவிட்டு நினைவுக்கு ஒரு photo எடுத்துட்டு கிளம்பி விட்டோம். 2km நடந்து. நீர்வீழ்ச்சிக்கு பொய் குளித்து விட்டு, மரப்பலீஸ்வறரை தரிசித்து, நாங்களும் trucking போனோம், trucking போனோம், trucking போனோம் என்று ஊர் வந்து சேர்ந்தோம்.

இந்த மொத்த triplayum, ஜகனை தவிர வேற ஒரு சின்ன ஜந்துவை கூட நாங்க பாக்கலைங்கறது தான் Highlight.

இதனால் அன்றுமுதல் நாங்கள் நால்வரும் , கொல்லிமலை சிங்கங்கள் என்றும், ஜகன் guideayya என்றும் போற்றப்பட்டான்.

கொல்லிமலை சிங்கங்கள் - 1

நாங்களும் trucking போனோம், trucking போனோம், trucking போனோம்!

விபரீத ஆசை

எனக்கு ஒரு விபரீத ஆசை வந்தது. திடீர்னு வந்த ஆசை இல்ல அது. என்னோட MCA classmate ஜகன், துறையூர் பக்கத்துல உள்ள புத்தனாம்பட்டியில digree படிச்சப்ப, பக்கத்துல இருக்க புளியஞ்சோலைக்கும், அங்கிருந்து அப்படியே நடந்தே காட்டு பதை வழியா கொல்லிமலைக்கும் அடிக்கடி போயிருக்கதாக, அவனோட வீர கதைகளை அப்ப அப்ப அவுத்து விடுறது வழக்கம். ஜகன் ரெண்டு வருஷமா குடுத்த பில்ட்அப்புல கொஞ்சம் கொஞ்சமா வந்த ஆசை அது. என்னோட BCA classmate PNT சுரேஷோட சொந்த ஊரு புளியஞ்சோலைக்கு ரொம்ப பக்கம்ங்கரதனால, நாங்க digree படிக்கிற காலத்துல பலதடவ அங்க பொய் பீராடி,நீராடிருக்கோம். சுரேஷ் வீட்லருந்து அவங்க அண்ணன், தம்பிகள், அவனோட அப்பாடக்கர் சித்தப்பா, மற்றும் பல நண்பர்களும், எங்களோட மகிழ்ச்சில பங்கெடுதுக்குவாங்க. எங்களுக்காக அன்னைக்ககி பல கோழிகளும் ஆடுகளும் அழிக்கபடுவது வழக்கம். சோ ( அட துக்ளக் சோ இல்லங்க ஆங்கில so ) , நமக்கும் புளியஞ்சொலைக்கும் ஒரு நெருங்கிய பந்தமிருந்ததாலையும், ஏற்கனவே ஒருமுறை தரைவழி மார்கமா, கொல்லிமலைக்கு பொய் அதோட, அடர்ந்த வனத்தையும், அதிக tourist தொந்தரவில்லாத அமைதியையும் ரசிச்சி இருந்ததனாலயும், எனக்கு ஏற்பட்ட ஆசைதான் இந்த trucking ஆசை. நமக்கு தான் எங்கயுமே தனியா போய் சிக்கி பழக்கமில்லையா, சரி போறது போறோம் ஏதாவது scene ஆய்டுச்சுன்னா கூட்டமா scene அகட்டும்னு, என்னோட BCA classmate ராஜேஷ், சோமு, சுந்தர், சுரேஷ், தினேஷ் போன்ற பெரும்புள்ளிகளிடம் சொல்ல, உற்சாகம் பெருக்கெடுத்தது.

வீர பயணம்

ஒரு சூனியம் கவ்விய மதிய வேலையில, Trucking கிளம்ப காயத்ரி டீ ஸ்டாலில் கூடினோம். சுரேஷ் வழக்கம்போல ஆயா ஆப்கானிஸ்தான் போராஹ, பாட்டி பாகிஸ்தான் போராஹ என்று கடைசி நேரத்துல உஷாரா கல்தா குடுக்க. தினேஷ், ஏசுவால் இரட்சிக்கப்பட்ட புனிதாத்மாங்கரதால அவனும் escape. நான், ராஜேஷ், சோமு, சுந்தர் நாலு பேரும் பாவம் மட்டுமே செஞ்ச பதர்கள்ங்கரதனால ஜகன் தலைமையில எங்க வீர பயனத்த தொடங்கினோம். ஜகனை drop பண்ண வந்த என் MCA mate JK , சோமுவோட உருவத்தையும் சுந்தரோட உருவத்தையும் பார்த்து வியந்து, இந்த trip சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக்கொள்வதாக வாழ்த்திவிட்டு சென்றான். ஜகன் தான் எங்கள அடுத்த 24 மணி நேரம் guide பன்ன போரதால, ஜகனுக்கு guideayyaன்னு பேர் வெச்சான் சோமு. ஜகன் என்னோட MCA mate , மற்ற மூவரும் என்னோட BCA Mates , இவர்களுக்கு இடையில் அவ்வளவாக பழக்கமில்லாத காலமென்பதால், அப்ப அப்ப சார், யோவ், ஏங்க என்று பேசி என் மண்டையில சூட்ட கேளப்பினானுங்க. எங்க guideayya அறிவுரைப்படி எல்லாரும் ஆளுக்கொரு 2 litre water Bottle , bread , jam , butter போன்ற இத்யாதிகளை எங்க damageஆனா backpackல load பன்னிருந்தோம். திருச்சியிலருந்து பஸ் ஏறி, ஒன்றரை மணி நேர பயணத்துக்கு அப்பறம், புளியஞ்சோலை வந்து சேர்ந்தோம்.

டவுசர் கிழிய நடந்தோம்

Bus standல இருந்து புளியஞ்சோலை நீரோடை பகுதிக்கு நடந்து வரதுக்கு முன்னாடியே நாக்கு தள்ள ஆரம்பித்தது, மணியோ பகல் 11 , முதுகிலோ சுமை , வயிற்றிலோ பசி, அடுத்தென்ன பக்கத்துல இருந்த ஆப்ப கடையில பூந்து half boil, omletteன்னு அலப்பறையாக அள்ளி கொட்டிகொண்டோம். மணி பகல் 12, புளியஞ்சோலைல இருந்து காட்டு மலைப்பாதை வழியா சுமார் 20 km நடந்தால் கொல்லிமலை போய்செந்து நாங்களும் truking போய்டோம், truking போய்டோம், truking போய்டோம் என்று வெற்றி மாலை சூடிரலாம். ஆனா இப்புடி வாயில வடை சுட்டா நல்லாத்தான் இருக்கும், நடந்து பாத்தா தான் தெரியும் டவுசர் எப்புடி கிழியும்னு. guideayya கணிப்பு படி இரண்டரை, அதிகபட்சம் மூணு மணி நேரத்துல கொல்லிமலை போய்செந்துரலாம். So ஓடையில ஒரு குளியலப்போட்டுட்டு fresha பயணத்தை தொடர்ந்தபோது மணி 12:30. மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தோம், மலைபாதைனதும், பச்சைபசேலென்ற பாசிபூத்த, பாறைகளும், சில்லென்ற காற்றும்னு தமிழ் சினிமா டூயட location மாதிரி mistuக்கு நடுவுல உங்க figurea கூட்டிட்டு டூயட் பாடலாம்னு நினைக்கிற கேவலமான mind voice நல்லாவே கேக்குது. உங்க உணர்ச்சிவசத்த கொஞ்சம் கட்டுபடுத்துங்க bossu , பங்குனி வெயிலு பல்லகாட்டிகிட்டு அடிக்கிது mistஆமுல mistu. காஞ்சு போன மரங்களும், தீஞ்சு போன பாறைகளும்தான் வழிநெடுக. மலைபாதைங்கரதனால, வழி மேல்நோக்கி படிபோல இருந்தது, அதுவும் சீரான நேரான படிகள் இல்லை, சிறு சிறு பாறைகளால் இயற்கையாக உருவான படிகல்ன்தறதால, ஒரு படி சிறுசாவும் ஒரு படி ரொம்ப பெருசாவும் கால அகட்டி அகட்டி வைக்கவேண்டியிருந்ததால, எங்கள் டவுசர் கிழிய ஆரம்பித்தது. பாதை தவிர ரெண்டு பக்கதிலயும் பெரிய பெரிய பாறைங்களும், கொஞ்சம் அடர்த்தியான காய்ந்த மரங்களும் durra கேளப்புரதுக்குன்னே இருந்தது. அரைமணி நேரம் நடக்குரதுக்குல்லையே எங்களோட மொத்த energyயும் burnஆகிரிச்சு. சோமு 104 கிலோ, சுந்தர் 90 கிலோ, ராஜேசும் நானும் சுமார் 85kilo இருந்தோம். ஜகன் மட்டும் எங்கள் முன்பு சிறிய பிராணிபோல 50 kiloவில் இருந்துகொண்டு யானைகளை மேய்க்கும் பாகன்போல ஜகன் எங்களை மேய்க்க ஆரம்பிச்சிட்டான். Come on guys , Hurry up Hurry upன்னு ஜகன் பீட்டர் விட எங்கள் அனைவர் காதிலிருந்தும் புகை. சரி மேல ஏறி அப்பறமா இவன கவனிப்போம்னு விட்டு வைத்தோம்.

கரடி கக்கூஸ் போனமாதிரி ஒரு Sound

மீண்டும் நடக்க ஆரம்பித்து ஒரு அரைமணி நேரம் விடாது நடந்தோம், மணி 1 :30 to 2 :00 இருக்கும், திடீரென்று கரடி கக்கூஸ் போன மாதிரி ஒரு சவுண்ட். எல்லார் முகத்துலையும், பீதி. எல்லாரும், ஜெயஹிந்த் பட அர்ஜுன் & co போல ஒண்ணா சேந்து நின்னோம். சத்தம் நின்று விட்டது, மீண்டும் நடந்தோம் மீண்டும் சத்தம், நின்றோம் நடந்தோம், சத்தம் கேட்டு கேட்டு நின்றது, என்னவா இருக்கும்னு எல்லாரும் ஒன்னு கூடி யோசிச்சோம், மலைப்பாதையில் கரடிகள் அதிகம்னு பலபேர் பீதியை கெளப்பி விட்டது ஞாபகத்திற்கு வர, guideayyaவிடம், ஜகன் நாம மாட்டிகிட்டோமா என்று பீதி பெருக்கெடுக்க கேட்டான் ராஜேஷ். அதற்ககு guideayya don't worry , எங்கிட்ட ஆயுதம் இருக்கு என்றான். Guideayyaa நீங்க எங்களுக்கு கெடச்ச தெய்வ guiduன்னு சொல்லி, ஆயுதத்தை எடுங்க, இன்னக்கி அதுவா, நாமளானு பாத்துருவோம்னு சொன்னான் சோமு. இதற்கிடையில் சத்தம் அதிகரிக்க, பீதியில் பேதி போகாத குறையாக durge ஆகி நின்னுட்டிருந்தோம் நானும் சுந்தரும். ஜகன் அவனோட backpackஅ கலட்டி அவன் கிட்ட இருந்த ஆயுதத்தை எடுத்தான் பாருங்க, அதுவரை durgeஇல் இருந்த நாங்கள் டரியலானோம். எல்லாரும் ஓடுங்கடா என்று நான் அலற, ஜெகனை தவிர எல்லாரும் ஓடிய ஓட்டம், ஒன்றரைகிலோமீட்டார் மேல் நோக்கி ஓடினோம். நாங்கள் ஏன் திடீறன்று ஓடினோம் என்று புரியாத ஜகன் பின்னால் ஓடி வந்து ஏன்டா திடீர்னு ஓடிடீங்கன்னு கேட்டான். அது வரை ஜெகனை, guidayya , ஜகன் sir , நண்பா , என்றெல்லாம் அழைதுகொண்டிருந்த சோமு போடா கேன baadu , நாதேறி நாயே, காதறுந்த கழுதையே, மூக்கறுந்த நரியே என்ற ரேஞ்சுக்கு திட்ட காரணம்? ஜகன் உள்ளிருந்து எடுத்த ஆயுதம் தான். Breadஇல் வெண்ணையும் ஜாமும் தடவ use பண்ற வெண்ணை வெட்டி கத்தியைத்தான் ஆயுதம்னு சொல்லிருக்கான் ஜகன், அதையும் நம்பி சோமு கரடியுடன் சண்டைபோட ரெடியாகி இருக்கான்.

கவலைக்கிடமான சோமு

மரண பீதியிலும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஜெகனிடம் ஒரு நல்ல ஆயுதம் இருந்திருந்தால் சோமு உண்மைலேயே கரடிகூட சண்ட போட்டிருப்பானோ?இத சோமு கிட்ட கேட்டதுக்கு defenitelyன்னான். ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அட ஆண்டவா ஏண்டா இந்த மாதிரி ஜென்மங்கலோடலாம் என்ன சேர விடுறேன்னு நடையை கட்ட ஆரம்பித்தோம். மேல போக போக காட்டோட Terror அதிகமாகிட்டே போச்சி, எங்க energy level கொறஞ்சுகிட்டே போச்சு. சோமு, சுந்தர், ராஜேஷ், நான் இந்த வரிசைல எல்லாரும் பலவீனமடைய ஆரம்பிச்சிட்டோம், பத்து நிமிஷம் நடந்தா 15 நிமிஷம் ரெஸ்ட், இந்த ரேஞ்சுல போய்கிட்டிருந்தோம். குட்டி ஜந்து ஜகன் மட்டும் Come on guys Come on ன்னு சீன் போட்டுகிட்டே இருந்தான். ஒருமணி நேரத்துக்கு அப்புறம் சோமு நிலைமை திடீர்னு ரொம்ப மோசமாயிரிச்சி, கொண்டு போன தண்ணி வேர கோறஞ்சுபோச்சு, சோமுவுக்கு மூச்சு திணறல் அதிகமா இருந்தது, ஒரு stagekku மேல சோமுவ மூட்டையா கட்டி நாலு பெரும் தூக்கிகிட்டு கீழ reverse வந்துரலாமானு யோசிச்சோம், ஆனா அப்படி வந்தா எங்க நாலுபேரையும் பாடையில கட்டிதான் ஊருக்கு கொண்டுவந்திருக்கணும். சோமு 104 கிலோ இதெல்லாம் நடக்கற காரியமான்னு நெனச்சப்போ சோமு confidenta ஏறிறலாம்னு சொன்னான். ஆனால் ஜகன் கிட்ட இன்னும் எவ்வளவு தூரம், எவ்வளவு தூரம்னு கேட்டு தொல்ல பண்ணிகிட்டே வந்தோம். இன்னும் கொஞ்ச தூரத்துல பாறைகள், குகைகள் இருக்கும் ஒரு இடம் வரும் அங்க பொய் half an hour rest எடுப்போம். அங்க போய்டா 90 % completedன்னு சொன்னான்.

பெருசுகளின் சேட்டை

சரி வந்துட்டோம் திரும்பிபோனா, புறமுதுகு காட்டிய கொழைகல்னு இந்த உலகம் நம்மள தப்ப பேசும்னு, எல்லாரும் திரும்ப ஏற ஆரம்பிச்சிட்டோம். மணி 4 : 30 இருக்கும், சூரியன் மலைக்கு பின்னால் ஒழிய ஆரம்பிச்சது. மரங்கள் கொஞ்ச கொஞ்சமா கொறஞ்சு வெறும் பாறைகள் மட்டுமே அதிகமா இருந்தது. ஒரு இடத்தில ரெஸ்ட் எடுக்கறதுக்கு ஏத்த மாதிரி பாறைகள் குகைகள்னு நல்ல location, ஆனா அத ரசிக்கிற நிலைமைல நாங்க இல்லை. அதுதான் ஜகன் சொன்ன location. அப்பாடா ஒருவழியா 90 % reach பண்ணியாச்சு இனி சீக்கிரம் போயிரலாம்னு இருந்தப்ப தான் ஜகன் ஒரு குண்ட தூக்கி போட்டான். உயரமான பகுதில நின்னு பார்த்தா யாருக்காவது தல சுத்துமானு கேட்டான். அவன் கேட்ட உடனே எனக்கு தலையெல்லாம் சுத்த ஆரம்பிசிரிச்சு, செத்துப்போன தாத்தா, பாட்டியெல்லாம் என் கண்ணுல தெரிய ஆரம்பிச்சிடாங்க. இல்ல.. இனி நடக்க வேண்டிய பாதை ஒரு 10 % தான், but கொஞ்சம் risk இருக்கும். எல்லாரும் என் பின்னாடி அல்லகட்டி வாங்கன்னு சொல்லி கூட்டிக்கிட்டு கேளம்பினார் எங்கள் guideayyaa. அப்போ ரெண்டு பெருசுங்க நாங்க வந்த பாதையிலேயே வந்து, எங்கள எங்க போறீங்க, என்ன பண்றீங்கன்னு விசாரிச்சுதுங்க. சீக்கிரம் கெளம்பி இருட்டுறதுக்குள்ளே ஊருக்குள்ளே போயிருங்கன்னு ஒரு பீதிய கேளப்பிவிட்டுட்டு போயிரிச்சுங்க. நாங்க பாத்துகிட்டு இருக்கும்போதே சர சரன்னு மலை மேல ஏறி விறு விறுன்னு போய்கிட்டே இருந்ததுங்க. நாங்க நஞ்சுபோன நாரக்காமாதிரி ஏரிகிட்டிருந்தோம். அவங்க 20 நிமிஷம் ஏறி, ஒரு பாறைல உக்காந்து, நாங்க வரத பார்த்து ரசிச்சி சிரிச்சி எங்கள கமெடி pieceஅ use பண்ணி டைம் பாஸ் பண்ணிச்சிங்க. நாங்க அதுங்க உக்காந்து இருந்த இடத்துக்கு போக ஒருமணி நேரமாச்சு. அப்பறம் இனிமே ஒன்னும் தூரம் இல்லே பாத்து சில்லுன்டிதனம் பண்ணாம போய் சேருங்கன்னு அட்வைஸ் வேர பண்ணிபுட்டு, எங்க வீடு இங்க பக்கம் தான்னு சொல்லி அதுங்க ரெண்டும் escape ஆகிரிச்சிங்க.

மரணத்தின் விளும்பு

சரி pointக்கு வருவோம், ஜகன் சொன்ன அந்த point வந்திருச்சு. மலையோட உச்சிக்கு வந்தாச்சி ஒரு பெரிய குன்று அதோட அந்த பக்கம் போய்ட்டா ஊருக்குள்ள போயிறலாம் ஆனா அந்த குன்று மேல ஏறி அந்த பக்கம் போக வாய்ப்பு இல்லை, அந்த குன்ற சுத்தி தான் போகணும். குன்ற எப்புடி சுத்துறது? இப்ப leftல குன்றோட ஒரு பகுதி, rightla சாவோட ஒரு பகுதி. ஆமா, கீழ விழுந்தா வீட்டுக்கு body பீடி sizeல கூட போய் சேராது, அவ்வளவு பெரிய பாதாளம். நடக்கறதுக்கு எவ்வளவு பெரிய இடம் தெரியுமா? ஒரு ஆள் ரெண்டு கால வெச்சி நிக்கலாம், கொஞ்சம் கவனக்குறைவா நின்னாலும் வைகுண்டம் waiting . இதுல, one by oneஅ போகணும், இத கடந்துட்டா எங்க trucking முடிஞ்சிரும். ஆனா மரண பயம் எனக்குள்ள heavyஆ உள்ள பூந்து மண்ட மயானத்துக்கு போகுர மாதிரியே ஒரு feeling. என்னைய தவிர எல்லாரும் ரெடியா இருக்காங்க, நான் மட்டும் வாங்க திரும்பி போயிரலாம்னு சொல்லி ஒரே அடம். ஆனா எவனும் கேக்கறதா இல்லே. சரி தனிதனியா போக வேண்டாம், எல்லாரும் கைய கோர்த்து பிடிசிகிட்டு one by oneஅ போகலாம், suppose கீழ விழுந்தா எல்லாரும்தான் விழுவோம் நீ மட்டு தனியா விழ வாய்ப்பே இல்லேன்னு சொல்லி என்னைய சமாதானபடுத்தினாங்க. எமன் என்னைய பார்த்து எகத்தாளமா சிரிச்சிகிட்டு இருந்தாலும், அந்த dealing எனக்கு புடிசிருக்கவே நானும் ஒகே சொல்லிட்டேன். மெது மெதுவா நடக்க ஆரம்பிச்சோம், நான் leftla பாறையோட பாறையா ஒட்டி நடந்தேன், மலைல ஒரே முள்ளுசெடி. சட்டை, கை, முதுகு எல்லா எடத்துலயும் கிழிச்சிது. ஜகன், டேய் முல்லுடா கொஞ்சம் தள்ளி வாடான்னான். எல்லாரும் கீழ விழுந்திருவோம் பரவா இல்லையான்னு கேட்டேன். உயிர்பொர நேரத்திலையும் உனக்கு எவ்வள்ளவு நக்கல்டான்னு பேசிக்கேட்டே மலைய கடந்துகிட்டிருந்தோம், அப்ப ராஜேஷ், சுந்தர் ரெண்டு பேர் முகத்தையும் பாத்தேன். மரண பீதியில அவனுங்க மூஞ்சிய பாக்க, எனக்கு ஒரே சிப்பு சிப்பா வந்துச்சு. அப்படியே minda divertpanni பாதாளத்தை பாக்காம, கொஞ்சம் கொஞ்சமா, குன்றின் அந்த பக்கம் வந்துட்டோம் அப்ப மணி 6:00. எங்களோட அஞ்சரை மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாலை பொழுதின் மயக்கத்திலே

அந்த இனிய மாலைபொழுதில், சூரியன் yellow color FasTrack cool glass அணிந்திருந்ததால், வானம் மஞ்சள் குளித்து இருந்தது, அந்த மாலை பொழுதின் மயக்கத்திலே, நாங்கள் புத்துயிர் பெற்று ஒரு வேற்று கிரகத்திற்கு வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு. உயிரோடு தான் இருக்கிறோமா, இல்லை அனைவரும் அல்பாய்ஸில் பரலோகத்துக்கு வந்துவிட்டோமா என்று எண்ணுமளவிற்கு சொர்கபுரியாக காட்சி தந்தது அந்த மாலை பொழுது. ஒரு உலக மகா சாதனைய புரிஞ்ச சந்தோசத்துல நாங்க எல்லாரும் துள்ளி குதிச்சி சந்தோசமா ஆடி ஊருக்குள்ளே நடந்தோம், இனி மலை இல்லை, பாதாளம் இல்லை, தனிமையில்லை, கரடிபயமில்லை, ஜெகனின் 'come on , come on ' இல்லை, மக்களோடு மக்களாக இயற்கை எழில் கொஞ்சும் அருவியில் போய் குளிக்கலாம். எங்கள் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கல், மண் ரோடுகளை கடந்து தார் ரோடு வந்து அடைந்தோம். கொல்லிமலை ஒரு சிறிய மலை கிராமம்ங்கரதால அங்க தங்குறதுக்கு பெருசா ஒன்னும் hotels கிடையாது. கொல்லிமலையில் அரப்பலீஸ்வரர் கோவில், அதுக்கு பக்கத்துல இருக்கும் Water Falls ரெண்டும் ரொம்ப famous. கோவில் பக்கத்துல சில cottages இருக்கும், so இப்ப அந்த கோவிலுக்கு போகணும். அடுத்து நாங்க பாக்குற ஆள் கிட்ட கோவிலுக்கு போறது எவ்வளவு தூரம்னு கேக்கணும். டவுசர் கிழிய நடந்து வந்ததால், எல்லாரும் செம tired .

வீர பயணம் தொடரும். . . . . .

Tuesday, December 13, 2011

சாதிகள் இல்லையடி பாப்பா!

"சாதிகள் இல்லையடி பாப்பா!" என்று உறக்கச்சொன்னவர், மக்களை இன்று வரை சொல்ல வைத்தவர், இந்தியாவில் உள்ள பல கோடி சாதிகளில் உயர்ந்த சாதி என்று கூறிகொண்ட பிராமண குலத்தில் பிறந்த, மகா கவி சுப்பிரமணிய பாரதி அவர்கள். தன் பூணலை அறுத்து எரிந்து, தனக்கு இந்த உயர்ந்த சாதிக்காரன் என்ற பகட்டு வேண்டாமென்று தூக்கி எரிய முற்படவில்லை என்றாலும், தாழ்ந்த சாதிக்காரன் என்று பிராமண குலத்தவர் ஒதுக்கிய மக்களில் ஒருவனுக்கு பூணல் அணிவித்து, அவனும் உயர்ந்தவன் என்று தங்கள் மக்களுக்கு உணர்த்த முற்பட்டவர்.

நம் நாட்டில் இன்றும் பேதிவந்தால் கூட, தம் சாதி மருத்துவரை அணுகுவோம் என்ற எண்ணமுடைய மக்கள் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், சங்கம் வைத்து சாதி வளர்க்கிரோம். தங்கம் செய்பவன் ஒரு சாதி, சிங்கம் வைத்திருப்பவன் ஒரு சாதி என்று அசிங்கம் செய்துகோண்டிருக்கிரோம். நம் அரசியல்வாதிகள் சாதி இல்லையென்றால் நமக்கேன்னவேளை இங்கே என்று பீதியாகி, சாதியை வீதி வீதியாக சாதிக்கட்சிகள் என்ற வடிவில் கூவி கூவி காலம் காலமாக விற்று வருகிறார்கள். அதுவும் ஓட்டு வடிவில், நன்றாகவே விற்பனையாகிறது.

நம் மக்களின் இரத்தத்தில் ஊரிவிட்டிருக்கும் சாதி எப்படி உருவானது? யாரால் உருவாக்கப்பட்டது? இந்த சாதி எனும் சைத்தானை சாட்டையால் அடித்து எப்படி விரட்டுவது?

கி.மு.1500களில் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்தபின்னோ, அழிக்கபட்டபின்னோ, ரோமானியர்கள், கிரேக்கர்கள், ஜெர்மானியர்கள் போன்ற நம் எல்லைக்குள் புலம்பெயர்ந்த ஐரோப்ப மக்களின் புத்திகூர்மையில் உருவானதே இந்திய வேதங்களும், சாதிய கலாச்சாரமும் என்பதும், அவர்கள் உருவாக்கிய சாதிகளில் வேதங்கள் ஓதும் தங்களை மேல் சாதியென்றும், மற்ற தொழில் செய்வோரை தொழிலுக்கேற்ற சாதிபெயரிட்டு, வகைபடுத்தி, அடிமைபடுத்த தொடங்கினர் என்பதும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்று. அப்போது கொழுத்திபோட்ட சாதி தீயில், நமக்கு நாமே, தமக்கு தாமே கொல்லி வைக்க ஆரம்பித்தது நமக்குள் இருந்த பெள்ளக்காய் தனம் என்பதையும் நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

கலப்பு திருமணம்.
கலப்பு, காதல் திருமணங்கள் பெருகிவிட்ட காலத்தில், சாதி தானாக ஒழிந்துவிடும் என்று நினைக்கலாம், ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை? கலப்பு திருமணம் செய்துவிட்டால் பென்னின் சாதி அழிந்து ஆனின் சாதி மேலோங்கும், அல்லது ஆனின் சாதி அழிந்து பென்னின் சாதி மேலோங்கும், எது தங்களுக்கு மேல் என்று கருதுகிறார்களோ அதை தங்களின் சந்ததியினரின் சாதிய அடையாளமாக காட்டுவதே நம் மக்களின் இயல்பாக இருந்துவருகிறது.

சரி, இப்போது இந்த சாதி எனும் சங்கிலியிலிருந்து விடுபடுவது எப்படி?
ஈ.வே.ரா என்னும் மாமனிதனின் மகா உழைப்பாலும், சிந்தனையாலும் காமராசரென்னும் கர்மவீரரின் நல்லட்சியாலும் நாம் இன்று அனுபவிக்கும் பல செல்வங்களின் மதிப்பு என்னவென்பது அது இல்லாதிருந்திருந்தால் தான் நமக்கு புரிந்திருக்கும். தீண்டாமை, குலகல்வி போன்ற பல அடிமைச்சங்கிலிகளை உடைத்தெறிய, பல தியாகங்களையும், மன உறுதியையும் நமக்கு கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் வழியில் சென்று நாம் சில தியாகங்களை செய்தால் மட்டுமே இந்த சாதி எனும் அடிமைச்சங்கிலியை நாம் அறுத்தெறிய முடியும் என்பது எனது கருத்து.

சாதி அடையாளம்
நாய்க்கு பொறை கொடுத்து நீ இன்னும் நாய்தான் என்பதை உறுதிபடுத்துவது போலவே, நமக்கு சாதிய அடிப்படையில் சலுகைகள் என்ற பெயரில் பொறை கொடுப்பது நம்மை இந்த சாதிகாரன் என்று அடையாலப்படுதுகின்றது என்பதே எனது கருத்து. எதற்கு இந்த சலுகைகள்? பொருளாதாரத்தில் பின் தங்கியிருப்பவர்கள் புரம்தள்ளபட்டுவிடக்கூடது என்பதற்கு அவர்களை கைகொடுத்து தூக்கிவிடவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. அதை பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டுமே தவிர இந்த சாதிக்காரன், பொருளாதாரத்தில் எந்த நல்ல நிலையிலிருந்தாலும் அவனுக்கு சலுகைகள் அல்லிகொடுக்கப்படும் என்பதும், இன்னொரு சாதிக்காரன் பொருளாதாரத்தில் மோசமான நிலையிலிருந்தாலும் அவன் மேல் சாதி என்பதால் அவனுக்கு சலுகைகள் மறுக்கப்படுவதும், என் மனதிற்கு ஒப்பாத ஒன்றாகவே இருக்கின்றது.

சாதி அடையாளம் அறுத்தல்.
சரி, இங்கு நம் சாதி அடையாளங்கள் வெளியிடப்படும் இடங்கள் எது? கல்வி நிலையங்களில், அரசாங்க அலுவலகங்களில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கிடைக்கும் சில சலுகைகளுக்காக நாம் நம் சாதி அடையாளத்தை காட்ட வேண்டியுள்ளது. நாம் உண்மையாகவே சாதியென்னும் மாயையிலிருந்து விடுபட விரும்பினால், ஒவ்வொரு தனிமனிதனும் நாம் பொருளாதாரத்தில் சொந்தக்காலில் நிற்கக்கூடிய நிலையில் இருந்தால், அல்ப சலுகைகளை எதிர்பாராமல், சாதி அடையாளங்களை வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டால் நாம் சாதியை பாதி ஒழித்து விட்டோம் என்றே அர்த்தம். இவ்வாறு பொருளாதாரத்தில் முன்னேறிய ஒவ்வொருவரும் செய்தாலே, நம் சாதிய அடையாளங்கள் அழிந்து போகும். பின் வரும் சந்ததியருக்கு நாம் என்ன சாதி என்பதே தெரியாமல் அழித்து விடலாம். தம்மை மேல் சாதியென்று கர்வத்திலுள்ள சிலர் மட்டுமே தங்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் வைத்து பீத்திக்கொள்ளும் நாள் வந்துவிடும். அதன் பின்னர், பெயருக்கு பின்னால் சாதி பெயர் சேர்ப்பவரையோ, அல்லது சாதி அடையாளங்களை வேளிப்படுதுபவரையோ, ஏன் சாதியை பற்றி பெசுபவரையே கேவலமாக பார்க்கும் பக்குவம் நம் அடுத்த சந்ததியருக்கு தானாக வந்துவிடும்.

நாம் அறுக்க தயாரா???

கல்லூரிக் காலங்கள் - 2

கேட்டேண்டா ஒரு கேள்வி!


நான், அண்ணன் Wills விஜயராகவன், தம்பி ஆனந்த், கடைக்குட்டி தினேஷ், ராஜேஷ், PNT சுரேஷ், சோமு, சுந்தர், T -Shirt கார்த்தி, NJ விஜய், வில்லங்கம் விஜயதுரை மற்றும் பலர் கூடும் இடம் காயத்திரி டீ ஸ்டால், சத்திரம் பேருந்து நிலையம் (இந்திரா காந்தி பெண்கள் கல்லூரி நேர் எதிரில், புனித வளனார் கல்லூரி அருகில்) திருச்சி-2 .

எங்க எல்லாருக்கும் வேலை வெட்டி ஏதும் இல்லநாலும் சொன்ன நேரத்துக்கு Punctualலா வர்றது நானும் ராஜேஷும் மட்டும்தான். சில நேரம் ராகவன் வந்துருவான். மத்த நாதேரிகளோட punctuality அதிபயங்கரமா இருக்கும். அதுக்கு அவனுங்க சொல்ற காரணம் அதிரடியா இருக்கும். நேத்து பேஞ்ச மழையில வீட்ல தண்ணி பூந்துருச்சி, motor போட்ல army வந்து காப்பாத்தினதாலதான் இப்பயாச்சும் வந்து சேந்தேன் என்ற ரேஞ்சுக்கு கப்சா விடுவான் சோமு. ஆயாவுக்கு பாயா வாங்கபோனேன், தாத்தாவுக்கு போட்டி வாங்கபோனேன் என்று காது கிழியிர அளவுக்கு கில்மா குடுப்பான் PNT சுரேஷ்.
இதுல எந்த காரணமுமே சொல்லாம, எகத்தாளம், இறுமாப்பு, நக்கல், நய்யாண்டிதனத்தோட திமிரா 5:00 மணிக்கி வரசொன்னா, 6:45 க்கு வர்றது எங்க கட குட்டி தினேஷ் மட்டும்தான். எல்லாரும் வந்ததுக்கப்புரம் ஒண்ணா சேந்து, காவேரி பாலத்தில் போய் உக்காந்து கூத்தடிக்கிறது வழக்கம்.

அன்னைக்கும் அப்டிதான் எல்லாரும் செம கடுப்புல wait பண்ணிட்டிருந்தோம், தினேஷ் நாதேறி அகஸ்மாத்தா late entry குடுக்க. வெறியேரியிருந்த அனைவரும் அவனை வழக்கம்போல வசைபோட்டனர். சோமு தன் பங்கிற்கு திட்டி தினேஷிடம் கவுன்ட்டர் வாங்கி கண்கலங்கி போய் நின்னான். ஏற்கனவே எல்லா நாய்கள் மேலயும் காண்டில் இருந்த நான் தினேஷை எல்லார் முன்னாடியும் ஒரு கேள்வி கேட்டேன். அந்த கேள்வி கேட்ட உடனே அந்த ஏரியால இருந்த எல்லாரும் (காயத்ரி டீ ஸ்டால், அன்னை Xerox, சுற்றும் முற்றும் இருந்த கடைகளுக்கு வந்திருந்த பெண்கள் மற்றும் அங்கு வெட்டியா நின்னுகிட்டிருந்த பல ஜந்துக்களும் எங்களையும் தினேஷையும் ஏளனமாக பார்க்க, தினேஷ் எங்களுக்கு குடுத்த கவுன்ட்டர் அட்டாக் கீழே.

பாரதி: ஏண்டா... எச்சகல நாயே, நீயெல்லாம் சோத்த திங்கிறியா இல்லே daasha திங்கிறியா?

தினேஷ்: அண்ணா கொவபடாதே! மாஸ்டர், அண்ணனுக்கு ஒரு ஸ்பெஷல் டீ போடுங்க.

பாரதி: கேட்ட கேள்விக்கு பதில். சோத்த திங்கிறியா இல்லே daasha திங்கிறியா?

தினேஷ்: அண்ணா, நீ ரொம்ப easyயா படக்குன்னு சொல்லிப்புட்டே, அனா நீயே கொஞ்சம் யோசிச்சி பாரு, அது எவளோ கஷ்டம்னு. Indha mattera அவளோ easyயா deal பண்ண முடியாது. இப்ப for example நீ போய், அர கிலோ சிக்கென் வாங்கலாம், ஒரு கிலோ மட்டன் வாங்கலாம், ஆனா ஒரு கால் கிலோ dash வாங்கிட்டு வர முடியுமா? நீயே யோசிச்சி பாரு, இல்லே நம்ம மாஸ்டர் அண்ணன்கிட்டே நம்மளால ஒரு plate dash குடுங்கன்னு கேட்டு வாங்கதான் முடியுமா சொல்லு. இல்லே அத திங்கறதுதான் அவ்ளோ easyயா.

அரைமணி நேரம் கீழ விழுந்து புரண்டு சிரிச்சிட்டு, மாஸ்டர் எங்கள் மூஞ்சில ஊத்த சுடுதண்ணி எடுக்கவே, இடத்தை காலி செய்து காவேரி பாலம் புறப்பட்டோம் மீண்டும் வெட்டி அரட்டை அடிக்க.

குறிப்பு:
(dash என்றால் எதைக்குறிக்கிறது என்பது அனைவரும் அறிவீர்களென்று நம்புகின்றேன். அறியாதவர்கள் contact தினேஷ்)

Monday, December 12, 2011

கல்லூரிக் காலங்கள் - 1


1999 to 2002ல் திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் படித்த நாட்கள், இளமை பருவத்தின் துடிப்பும், கல்லூரி நட்பின் இனிப்பும், கலந்து எங்களுக்குள் ஏற்படுத்தி விட்ட ரசாயன மாற்றங்கள் இன்னமும் எங்களுக்குள் அடங்கவில்லை. அக்கலூரி காலத்தின் பல நாட்கள் இன்னும் எங்கள் இதயத்தில் பசுமரத்து ஆணி போல் இறுகிக்கிடக்கிறது. எங்கள் உயிர் பிரியும் தருணத்திலும் அந்த நாட்களை நினைத்து, மகிழ்ந்து, பின் இறப்போம் என்றே நம்புகின்றோம்.

இனி வரும்நாட்களில், எங்கள் கலூரி காலத்தின் சில சுவையான சம்பவங்களை அசைபோடுவோம்.


நான் உட்பட பல நண்பர்கள் ஒரு மொக்க classல மாட்டிகொண்டோம், (எஸ்தர் மேடம் என்று ஞாபகம்,). அப்போது அந்த மொக்கயிளிருந்து தப்பிய ஆனந்த், ராகவன், T-Shirt கார்த்தி மூவரும் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறி என்ன செய்யலாமென்று தங்கள் மண்டைக்குள் மைனா விட்டு யோசித்தனர்.

Scene 1:
இடம்: கல்லூரி வளாகத்துக்கு வெளியே, Bus Stand அருகில் உள்ள டீ கடை

பாத்திரங்கள்: ஆனந்த், விஜய ராகவன், T-Shirt கார்த்தி (கல்லூரிக்கு ஒரே ஒரு நாள் T-Shirt போட்டு வந்த பாவத்துக்காக அன்று முதல் T-Shirt கார்த்தி என்று அழைக்கபடுபவன்(பய coloru செம terroru)).

உரையாடல்:

விஜயராகவன்: என்னடா கார்த்தி, பயபுள்ளங்கே நல்லா சிக்கிக்கிட்டானுங்க போல அதுவும் எஸ்தர் madam கிளாஸ்ல.

T-Shirt கார்த்தி: நல்லா சாகட்டும்டா, நாய்ங்க. Canteenla ஒரு சிப் டீ கேட்டதுக்கு இந்த NJ பய என்ன பண்ணினான் தெரியுமா?

விஜயராகவன்: என்ன பண்ணினான், காசு கேட்டானா?? உனக்கு காசு கேட்டாலே எழவு பொத்துக்கிட்டு வருமே?

T-Shirt கார்த்தி: அது இல்லே விஜி. டீல எச்சி துப்பி வெச்சிடாண்டா.

விஜயராகவன்: ஏன்டா எச்ச நாயே. டி வேணும்னா ரெண்ருவா குடுத்து வங்கி குடி, இல்லே அந்த ஆஞான் Canteenla கடன் வாங்கியாவது குடி, அந்த எச்ச நாய் NJ பயகிட்டே பொய் ஏன் கேட்டே.

ஆனந்த்: அண்ணே Tensiona கொரை. நான் அத propera deal பண்ணீட்டேன்

விஜயராகவன்: ஏண்டா தம்பி என் மாப்ளே கார்த்தி ஒரு சிப் டீ கேட்டதுக்கு, அவன் டீல எச்ச துப்பிருக்கான் நீ பாத்துட்டு சும்மாவா இருந்தே?

ஆனந்த்: அண்ணே! பாத்துட்டு சும்மா இல்லைன்னேன்! நானும் எச்ச துப்பி வெச்சிட்டேன் ஹஹஹாஹ் ஹஹஹ்ஹா ஹ்ஹஹா

விஜயராகவன்: அட எச்ச பசங்களா இதெல்லாம் ஒரு பொழப்பு.. அந்த டீய நாய்க்கி ஏதும் ஊதீரலையே நாயே, நாய் செத்துபோயிரும்.

T-Shirt கார்த்தி: இல்லடா ராகவா அந்த டீய ராஜேஷும் பாரதியும் குடிச்சிட்டானுங்க.

விஜயராகவன்: என் மானத்த வந்குறேதே என் மூத்த தம்பி பாரதி பய தாண்டா. அந்த எச்ச பய வரட்டும் வச்சிக்கறேன் கச்சேரி. சரி சரி அவனுங்க வரதுக்கு
நேரமாகும், நம்ம அது வரைக்கும் என்ன பண்ணலாம்.

ஆனந்த்: அண்ணே!,, சின்ன அண்ணன் பாரதி வந்துட்டா என்ன கடைசி பஸ் வர வரைக்கும் காயத்திரி டீ கடையில இருந்து விட மாட்டான் அதனால இப்பவே
கிளம்பலாம்னு நெனக்கிறேன்

விஜயராகவன்: ஹய் அப்புடியெல்லாம் கிளம்பமுடியாது ராசா. வா அவனுங்க வர வரைக்கும் சரக்கடிக்கலாம்.

T-Shirt கார்த்தி: நீ தெய்வண்டா மாப்ளே.

ஆனந்த்: அண்ணே என்னைய பத்தி உனக்கே தெரியும், வேணாம், அப்பறம் வீட்ல பெரிய scene ஆயிரும் .

T-Shirt கார்த்தி: இவன் ஒருத்தன்டா, வீட்டுக்கு போய் இவங்க அப்பாவும் இவனும் கட்டி புடிச்சி முத்தம் குடுத்தா தான் தூங்குவானுங்க கொடுமைடா சாமீ.

விஜயராகவன்: வொக்காளி பெரிய நேரு பரம்பரை, அப்பாவும் மகனும் அப்புடியே கட்டிபுடிச்சி முத்தம் கொடுத்துதான் நட்புரவ வலப்பானுங்க. அப்டியே வாயிலயே மிதிக்கணும். நீ ங்கொப்பாவுக்கு Kiss அடிப்பியோ, ஓரமா போயி Piss அடிப்பியோ நாம இன்னக்கி குடிக்கிறோம்

ஆனந்த்: சரி, அண்ணன் முடிவு பண்ணிட்டே என்ன சொன்னாலும் கேட்க மாட்டே ரைட்டு விடு. டேய் ஜீயபுரதான்..... உன் நிலைமை ஊ ஊஊஊ தாண்டி வா.(T-Shirt கார்த்தி ஜீயபுரத்துகாரன்)

T-Shirt கார்த்தி: ராகவா... எங்கடா போய் குடிக்கிறது? பசங்க வந்தா நம்மள பஸ் ஸ்டாண்ட்ல தான் தேடுவாங்க. சுந்தர் செல்லுக்கு கால் பண்ணி சொல்லிரலாம்னா போன எடுக்க மாட்டேங்கறான்.

ஆனந்த்: Don't worry, I have a plan.

ஆனந்த் அதன் பின்பு கல்லூரி உள்ளிருந்து, அவர்கள் சென்ற கருவகாடு வரை தீஞ்சு போன ஒரு chock pieceஆல் map வரைந்தான். 2 kilometer தள்ளி உள்ள ஒரு கருவகாட்டில் அவர்கள் அமர்ந்து குடிக்குமிடம் வரை, வழிநெடுக Aero Mark நடு ரோட்டில் போட்டு பக்கத்தில் Rum பாட்டில் வரைந்து குறிப்பு வேறு எழுதியிருந்தான்.

Scene 2:
ஒரு மணி நேரத்துக்கு பின்:
இடம்: கல்லூரி அருகே சரக்கடிச்சான் கருவகாடு

ஒரு புறம் ஆனந்த் வழிபோக்கர் ஒருவரிடம் தான் படுத்துறங்க அவரது வேஷ்டியை கழட்டி தரச்சொல்லி அடம்பிடிக்க, வழக்கம்போல் விஜயராகவனின் போதைக்கு ஊறுகாயாக கார்த்தி சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தான்(பாவம் கார்த்தி அவன் மட்டும் சரக்கடிக்கல). ஆனந்த் போட்ட ஏரோ மார்க்கை வைத்து ஆனந்த், ராகவனையும் இவர்களிடம் சிக்கிய கார்த்தியையும் மீட்டுவந்தது திருவாளர் சோமு தலைமையிலான டீம்.

அவர்களை பஸ்ஸில் ஏற்றி காட்டூரிளிருந்து, சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழியில், ஆனந்த் மூன்றுமுறை Full Boil போட, Conductor மற்றும் Publickin கோவகனைகளை தாண்டி, காயத்ரி டீ கடைக்கு வந்துசேர்ந்தோம்

அப்பறம் வெறுப்பாகி எல்லாரும் சேந்து Sun Raise க்கு சரக்கடிக்க போனதுடன் என்ன நடந்ததுங்கறது எனக்கு ஞாபகம் இல்லை. நண்பன், ஐயர் வீட்டில் சென்று தஞ்சமடைந்ததாக தகவல்.

கல்லூரி காலங்கள் தொடரும்......

Friday, December 9, 2011

குழம்பு டிக்கா

சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இவர்களுடன் டூயட் பாடி கொண்டிருக்கும்போதே இவர்கள் இப்பொது சவுந்தர்யா அஷ்வின் மற்றும் ஐஸ்வர்யா அபிஷேகாக மாறிவிட்டது நினைவுக்கு வந்ததும் ஆட்டத்தை நிறுத்தினேன். சுதா(மனைவி) வாயால திட்டுவாங்கி, என் பையன் கால்ல மிதிவாங்கி. காலைல அகஸ்மாத்தா 8:30க்கு எழுந்து, காலை கடனை
முடித்துவிட்டு, வந்தால் (Green Tea) என்ற பெயரில் சுதா குடுத்த பானம், நான் அடித்ததிலேயே மட்டமான சரக்கான Monitorஐ விட கேவலமாக இருந்தாலும் பொருத்துகொண்டு side dish ஏதுமில்லாமலே குடித்து விட்டு, சன் நியூஸ்
சேனலை தட்டிவிட்டால் இன்றும் அதே முல்லை பெரியாரனையை உடைத்தும் உடைகாமலும் நம்ம ஊர் அரசியல்வாதிகளின் அறிக்கைதான் அங்கே ஹாட் நியூஸ். ரைட்டு விடு என்று சன் மியூசிக் மற்றும் இசையருவி channelகளை மாற்றி மாற்றி பார்த்தேன்.வழக்கம்போல சன் மியூசிக்கில் தன் புஜ பலத்தை காட்டிக்கொண்டு போன் பண்ணும் வெட்டி முண்டங்களுடன் கடலைபோட தெரியாத அம்மாஞ்சி போல ஒருவன் கடிபோட்டுகொண்டிருக்க. இசையருவியில் தன் குறுந்தாடி அழகை ரசித்து புகழ்ந்த பெங்களுரு அழகிகளிடம் வழிந்து கொண்டு இருந்தான் ஒருவன். இப்படியாக கழிந்தது என் காலை பொழுது.

சரி மணி வேறு 9:45 ஆகிவிட, விருப்பமே இல்லாத அந்த எழவெடுத்த வேலைக்கு பொய் தொலைக்க வேண்டுமே என்று குளித்து கெளம்பி சுதா சுட்டு கொடுத்த வழக்கமான தோசையை ருசித்து உண்டு விட்டு(எங்கள் வீட்டில் வாரத்தில் ௧௧ நாட்கள் காலையும் மாலையும் தோசைதான்) முக்கால் கிலோமீட்டர் நடந்து வந்து பஸ் ஏறி கடைசி சீட்டில் உட்கார்ந்தேன். speed breakerரில் பஸ் ஏறி இறங்கியதும் என் தலை பஸ்சின் மேற்கூரையை தொட்டுவிட்டு வந்தது, நல்லா தானே போய்கிட்டிருக்கு ஏண்டா இப்புடி என்று நினைத்துக்கொண்டிருக்கயிலேயே என் நிறுத்தம் வந்தடைந்தது பஸ். அங்கு இறங்கி இன்னொரு பஸ் (VOLVO A/C) பிடித்து ஆபீஸ் வந்தடைந்தேன் (இங்கும் ஒரு கிலோமீட்டர் நடக்கணும்). ஷ்ஷ்ஷ்ஷ் அப்பா இப்பவே கன்ன கட்டுதே என்றபடி என் deskகை வந்தடைந்த பொது மணி 11:45.

சுற்றும் முற்றும் ஒரு நோட்டம் விட்டேன். என்னருகே இருக்கும் டெஸ்கில் அமரும் பரத் ராமச்சந்திரன் மற்றும் சில தலைகள் மட்டுமே வந்திருந்தனர். என் துறைத்தலைவர் உட்பட பலர் இன்னும் வந்திருக்கவில்லை(இந்த_____கா இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சி வந்தோம் என்று நினைத்துகொண்டு என் மடிகணினியை சுவிட்ச் on செய்தேன். அது on ஆவதற்குள்(குறைந்தது 5
நிமிடங்கள் ஆகும், பல Passwordகள் குடுக்க வேண்டும் Securityயாம் சுண்டக்காய்) இரண்டு நாட்கள் முன்பு பரத் ராமச்சந்திரன் என் ரிங் டோனை கேட்கவேண்டு என்றது நினைவிற்கு வர அவரிடம் நினைவுபடுத்தினேன். அவர் என்
கைபேசிக்கு அழைக்க அது "Hello Hello Mic Testing 1 2 3 என்னையா கோர கோரணு கேக்குது என்னத்தயாவது கொண்டாந்து குடுதுவுட்டுட்டு போயிறீங்க உங்கபாட்லே" என்று அலற ஆபீசில் சிரிப்பலை.

ரிங் டோன் சத்தம் இன்னொரு துறைதலைவியான முத்துமங்கை காதை உறுத்த அவர் அங்கிருந்து எழுந்து வந்து இது என்ன சுதா கால் பண்ணினா வர்ற ரிங் டோனா என்று கேட்டு என்னை கலாயப்பதாக நினைத்து அவரே சிரிக்க நான் அதை சற்றும் சட்டை செய்யாமலிருப்பதை பரத் கவனித்துவிட்டு அந்த மங்கை தொப்பிவாங்கியதை மறைப்பதற்காக எங்கள் கவனத்தை திசை திருப்ப முற்பட்டு, பெங்களூருவில் இந்திராநகரில் ஒரு செட்டிநாடு அசைவ உணவகம் திறந்திருக்கும் செய்தியை சொன்னதும். செட்டிநாடு மக்களான எனக்கும் முத்துமங்கைக்கும் எங்கள் ஊர் உணவு ஞாபகம் வர, நாங்கள் உணவை பத்தி பேச
ஆரம்பித்தோம் அதில் பேச்சு எங்கெங்கோ பொய் கடைசியில் குழம்பு டிக்கா பக்கம் வந்து சேர்ந்தது. குழம்பு டிக்கா என்றால் என்னவென்றே தெரியாது என்று சொன்ன பரத் ராமச்சந்திரனுக்கு குழம்பு டிக்கா செய்வது எப்படி என்று விளக்கி சொன்னதுடன் முடிந்தது எங்கள் அரட்டை அரங்கம்.

அவரவர் வேலையை பார்க்க அவரவர் இருக்கைக்கு செல்ல காலையில் அதுவும் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை காலையிலேயே குழம்பு டிக்கா ஞாபகம் வந்துவிட்டால் எப்படி இனி வேலை செய்வது?
பசுபதி விட்ரா போகட்டும்....