Tuesday, December 13, 2011

சாதிகள் இல்லையடி பாப்பா!

"சாதிகள் இல்லையடி பாப்பா!" என்று உறக்கச்சொன்னவர், மக்களை இன்று வரை சொல்ல வைத்தவர், இந்தியாவில் உள்ள பல கோடி சாதிகளில் உயர்ந்த சாதி என்று கூறிகொண்ட பிராமண குலத்தில் பிறந்த, மகா கவி சுப்பிரமணிய பாரதி அவர்கள். தன் பூணலை அறுத்து எரிந்து, தனக்கு இந்த உயர்ந்த சாதிக்காரன் என்ற பகட்டு வேண்டாமென்று தூக்கி எரிய முற்படவில்லை என்றாலும், தாழ்ந்த சாதிக்காரன் என்று பிராமண குலத்தவர் ஒதுக்கிய மக்களில் ஒருவனுக்கு பூணல் அணிவித்து, அவனும் உயர்ந்தவன் என்று தங்கள் மக்களுக்கு உணர்த்த முற்பட்டவர்.

நம் நாட்டில் இன்றும் பேதிவந்தால் கூட, தம் சாதி மருத்துவரை அணுகுவோம் என்ற எண்ணமுடைய மக்கள் உண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், சங்கம் வைத்து சாதி வளர்க்கிரோம். தங்கம் செய்பவன் ஒரு சாதி, சிங்கம் வைத்திருப்பவன் ஒரு சாதி என்று அசிங்கம் செய்துகோண்டிருக்கிரோம். நம் அரசியல்வாதிகள் சாதி இல்லையென்றால் நமக்கேன்னவேளை இங்கே என்று பீதியாகி, சாதியை வீதி வீதியாக சாதிக்கட்சிகள் என்ற வடிவில் கூவி கூவி காலம் காலமாக விற்று வருகிறார்கள். அதுவும் ஓட்டு வடிவில், நன்றாகவே விற்பனையாகிறது.

நம் மக்களின் இரத்தத்தில் ஊரிவிட்டிருக்கும் சாதி எப்படி உருவானது? யாரால் உருவாக்கப்பட்டது? இந்த சாதி எனும் சைத்தானை சாட்டையால் அடித்து எப்படி விரட்டுவது?

கி.மு.1500களில் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்தபின்னோ, அழிக்கபட்டபின்னோ, ரோமானியர்கள், கிரேக்கர்கள், ஜெர்மானியர்கள் போன்ற நம் எல்லைக்குள் புலம்பெயர்ந்த ஐரோப்ப மக்களின் புத்திகூர்மையில் உருவானதே இந்திய வேதங்களும், சாதிய கலாச்சாரமும் என்பதும், அவர்கள் உருவாக்கிய சாதிகளில் வேதங்கள் ஓதும் தங்களை மேல் சாதியென்றும், மற்ற தொழில் செய்வோரை தொழிலுக்கேற்ற சாதிபெயரிட்டு, வகைபடுத்தி, அடிமைபடுத்த தொடங்கினர் என்பதும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்று. அப்போது கொழுத்திபோட்ட சாதி தீயில், நமக்கு நாமே, தமக்கு தாமே கொல்லி வைக்க ஆரம்பித்தது நமக்குள் இருந்த பெள்ளக்காய் தனம் என்பதையும் நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

கலப்பு திருமணம்.
கலப்பு, காதல் திருமணங்கள் பெருகிவிட்ட காலத்தில், சாதி தானாக ஒழிந்துவிடும் என்று நினைக்கலாம், ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை? கலப்பு திருமணம் செய்துவிட்டால் பென்னின் சாதி அழிந்து ஆனின் சாதி மேலோங்கும், அல்லது ஆனின் சாதி அழிந்து பென்னின் சாதி மேலோங்கும், எது தங்களுக்கு மேல் என்று கருதுகிறார்களோ அதை தங்களின் சந்ததியினரின் சாதிய அடையாளமாக காட்டுவதே நம் மக்களின் இயல்பாக இருந்துவருகிறது.

சரி, இப்போது இந்த சாதி எனும் சங்கிலியிலிருந்து விடுபடுவது எப்படி?
ஈ.வே.ரா என்னும் மாமனிதனின் மகா உழைப்பாலும், சிந்தனையாலும் காமராசரென்னும் கர்மவீரரின் நல்லட்சியாலும் நாம் இன்று அனுபவிக்கும் பல செல்வங்களின் மதிப்பு என்னவென்பது அது இல்லாதிருந்திருந்தால் தான் நமக்கு புரிந்திருக்கும். தீண்டாமை, குலகல்வி போன்ற பல அடிமைச்சங்கிலிகளை உடைத்தெறிய, பல தியாகங்களையும், மன உறுதியையும் நமக்கு கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் வழியில் சென்று நாம் சில தியாகங்களை செய்தால் மட்டுமே இந்த சாதி எனும் அடிமைச்சங்கிலியை நாம் அறுத்தெறிய முடியும் என்பது எனது கருத்து.

சாதி அடையாளம்
நாய்க்கு பொறை கொடுத்து நீ இன்னும் நாய்தான் என்பதை உறுதிபடுத்துவது போலவே, நமக்கு சாதிய அடிப்படையில் சலுகைகள் என்ற பெயரில் பொறை கொடுப்பது நம்மை இந்த சாதிகாரன் என்று அடையாலப்படுதுகின்றது என்பதே எனது கருத்து. எதற்கு இந்த சலுகைகள்? பொருளாதாரத்தில் பின் தங்கியிருப்பவர்கள் புரம்தள்ளபட்டுவிடக்கூடது என்பதற்கு அவர்களை கைகொடுத்து தூக்கிவிடவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. அதை பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டுமே தவிர இந்த சாதிக்காரன், பொருளாதாரத்தில் எந்த நல்ல நிலையிலிருந்தாலும் அவனுக்கு சலுகைகள் அல்லிகொடுக்கப்படும் என்பதும், இன்னொரு சாதிக்காரன் பொருளாதாரத்தில் மோசமான நிலையிலிருந்தாலும் அவன் மேல் சாதி என்பதால் அவனுக்கு சலுகைகள் மறுக்கப்படுவதும், என் மனதிற்கு ஒப்பாத ஒன்றாகவே இருக்கின்றது.

சாதி அடையாளம் அறுத்தல்.
சரி, இங்கு நம் சாதி அடையாளங்கள் வெளியிடப்படும் இடங்கள் எது? கல்வி நிலையங்களில், அரசாங்க அலுவலகங்களில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கிடைக்கும் சில சலுகைகளுக்காக நாம் நம் சாதி அடையாளத்தை காட்ட வேண்டியுள்ளது. நாம் உண்மையாகவே சாதியென்னும் மாயையிலிருந்து விடுபட விரும்பினால், ஒவ்வொரு தனிமனிதனும் நாம் பொருளாதாரத்தில் சொந்தக்காலில் நிற்கக்கூடிய நிலையில் இருந்தால், அல்ப சலுகைகளை எதிர்பாராமல், சாதி அடையாளங்களை வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டால் நாம் சாதியை பாதி ஒழித்து விட்டோம் என்றே அர்த்தம். இவ்வாறு பொருளாதாரத்தில் முன்னேறிய ஒவ்வொருவரும் செய்தாலே, நம் சாதிய அடையாளங்கள் அழிந்து போகும். பின் வரும் சந்ததியருக்கு நாம் என்ன சாதி என்பதே தெரியாமல் அழித்து விடலாம். தம்மை மேல் சாதியென்று கர்வத்திலுள்ள சிலர் மட்டுமே தங்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் வைத்து பீத்திக்கொள்ளும் நாள் வந்துவிடும். அதன் பின்னர், பெயருக்கு பின்னால் சாதி பெயர் சேர்ப்பவரையோ, அல்லது சாதி அடையாளங்களை வேளிப்படுதுபவரையோ, ஏன் சாதியை பற்றி பெசுபவரையே கேவலமாக பார்க்கும் பக்குவம் நம் அடுத்த சந்ததியருக்கு தானாக வந்துவிடும்.

நாம் அறுக்க தயாரா???

5 comments:

  1. un katturai padithen. jathi mel unnaku undana kovamum athan thakamum therinthathu.unnai polave nanum aruka(jathi) thayar, aanal un economical reservation enpathil ennaku udanpadu illai.innum namai sutri ulla village reservation enral enna enpathu kuda theriyathu theriuma. inum nam sagotharan malam sapidugiran theriuma avolovu yen railway st la innum kaiyal malam allugirargal theriuma. ni solvathu pol naai ku porai alla reservation. avargal thinum mala thirku pathil oru velai sapadu reservation. muthalil namaku kalvi vendum. kalvi arivu vendu.
    porulatharathilum reservationilum than jathi valgirathu endru kurukiraiya?
    nanba........................illai

    ReplyDelete
  2. டேய் மனிதா,
    கட்டுரையை படித்தாய், முழுதாய் படித்தாயா? உன் கேள்விக்கும் சந்தேகத்திற்கும் பதில் என் கட்டுரையில் இருக்கிறது. உனக்காக மீண்டும் கீழே எடுத்துரைத்துள்ளேன். தயவு செய்து இனி எதை படித்தாலும் முழுதாய் படித்து புரிந்து பின் "Comment" எழுதவும். Reservation கண்டிப்பாக தேவை மழம் தின்னும் நிலையில் யாரிருந்தாலும் அவனுக்கு reservation தேவை, ஒருவேளை மேல்சாதி என்று சொல்லப்படும் சாதியில் பிறந்தவன் மழம் தின்னும் நிலையிலிருந்தாலும் அவனுக்கு reservation வேண்டுமென்பதே எனது கூற்று. மெல்ல மெல்ல இந்த reservation சாதிய அடிப்படையிலிருந்து பொருளாதார அடிப்படைக்கு மாற வேண்டுமென்பது எனது ஆசை.(கீழ்சாதி, மேல்சாதி என்பதின்றி கஷ்டப்படும் அனைவரும் ஓர் சாதி என்பதாகவேண்டும் என்பதும் என் ஆசை.

    கட்டுரையிலிருந்து உனக்காக:
    "ஒவ்வொரு தனிமனிதனும் நாம் பொருளாதாரத்தில் சொந்தக்காலில் நிற்கக்கூடிய நிலையில் இருந்தால், அல்ப சலுகைகளை எதிர்பாராமல், சாதி அடையாளங்களை வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டால் நாம் சாதியை பாதி ஒழித்து விட்டோம் என்றே அர்த்தம்"

    ReplyDelete
  3. வானம் எனக்கொரு போதி மரம்
    சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.
    சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

    தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

    இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் , என்று பெயர்கள் பாவனையில் இருப்பதனைக் காணும் பொழுது உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது.
    நல்லையா தயாபரன்

    ReplyDelete
  4. பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இது போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

    இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குழுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

    அண்மைய காலத்தில் தமிழகத்தில் அது போன்ற ‘ஜாதி அடைமொழிகள்’ சிறிதே வெளிப்பார்வைக்கு எழுதி அறிவித்துக் கொள்வது குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் லோ கட் ஜீனும் , யூ பெட் என்ற வாசகத்தை கொண்ட டீ சர்ட்டும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டறியாத உடை உடுத்திகளின் மண்டைகளை கொண்ட ட்ரெண்ட் செட்டர்களின் நடவடிக்கைகளைப் போல, நவீன இளைஞர்களில் பலர் ஐயர்களையும்,செட்டி களையும் தங்களின் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தி வருவதும் ’ட்ரெண்ட் செட்டிங்’ அவதானிப்பிலேயே என்னால் கண்ணுற்று கடந்து போக முடியவில்லை.

    ஏனெனில் இன்று நாம் தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியால் இந்த பரந்து விரிந்து கிடந்த உலகத்தை ஒருங்கே இணைத்துக் கட்டி, ஒரு சொடுக்கு நிகழ்த்தும் நிகழ்விற்கும் குறைவான காலத்தில் ஒரு மண்டைக்குள் இருக்கும் எண்ணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அது உலகம் முழுதுமே கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு - ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக் என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி, படித்து உலகம் சுற்றி தனது மண்டை வளர்ந்து விட்டதாக அறிவித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இன்னமும் இந்த அடைமொழியின் மூலமாக எது போன்ற விளைவுகளை இந்த மனிதக் கடலில் கலக்க எண்ணி கலக்கிறோம். இது போன்ற அறிவு முண்டியடிக்கும் ஒரு கால கட்டத்தில், அது போன்ற துருத்தல்கள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ளக் கூட வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?

    அப்படி அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது ?

    சரி அரைகுறைகளை விட்டுவிடுவோம். காலம் வரும் பொழுது தானாகவே விளங்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசையில். கலைச் சேவையோ அல்லது லைம் லைட்டிற்கு கீழே நிற்கும் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு இயக்குனர் தனது படங்களின் மூலமாகவோ, அல்லது தனது புத்தகத்தின் மூலமாகவோ சில சமூக கருத்துக்களை முன் வைக்கும் இடத்தில் இருப்பவர் எப்படி தான் ஒரு முட்டாள், இன்னும் அந்தக் கட்டத்தையே தாண்டவில்லை என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வே அற்ற நிலையில் இப்படி சமூகத்தில் தன்னை அது போன்ற ஒரு ’நச்சு அடைமொழியுடன்’ முன் நிறுத்திக் கொண்டிருக்க முடியும்.

    தான் இந்தத் துருத்தலை தூக்கிக் கொண்டு அலைவதால் முதலில் தான் ஒரு முட்டாள் என்பதனை ஊரறிய ஒத்துக் கொள்பவனாகவும், அடுத்த மனிதர்களை சஞ்சலமடையவும், உணர்வுகளை நசுங்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வற்ற மூடனாகத்தானே நம்மால் புரிந்து கொள்ள முடியும்?
    நல்லையா தயாபரன்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்
    நிச்சயமாக நீங்கள் கூறியது போல் நடந்தால் மாற்றம் உண்டாகும்.நான் அறுக்கத் தயார்.

    ReplyDelete