Friday, December 16, 2011

கொல்லிமலை சிங்கங்கள் - 2

நாங்களும் trucking போனோம், trucking போனோம், trucking போனோம்!

கோவில் பக்கத்துல சில cottages இருக்கும், so இப்ப அந்த கோவிலுக்கு போகணும். அடுத்து நாங்க பாக்குற ஆள் கிட்ட கோவிலுக்கு போறது எவ்வளவு தூரம்னு கேக்கணும். டவுசர் கிழிய நடந்து வந்ததால், எல்லாரும் செம tired .

பாதை மாறிய பதர்கள்

தார் ரோடு போர பாதையிலேயே நடக்க ஆரம்பிச்சோம், ஒரு கால் கிலோமீட்டர் நடந்த அப்புறம் ரோட்டிலருந்து இடதுபுறமா, கொஞ்ச தூரத்துல 2 பேர் நின்னு மரம் வெட்டிகிட்டு இருந்தாங்க. நாங்க ரோட்டை விட்டு செம்மண் ரோட்ல எறங்கி, அவங்க கிட்ட வழி கேக்க போனோம். 55 வயசு மதிக்க தக்க ஒருத்தர் ஒரு சின்ன மரத்த அருவாளால வெறகுக்காக வெட்டிகிட்டு இருந்தார், ஓர் 25 வயது மதிக்கத்தக்க ஒருத்தர் லுங்கியோட அவர்கிட்ட பேசிட்டிருந்தார். நாங்க அவங்கள நெருங்கவே, அவங்க பேசுறத நிறுத்தி விட்டு, "என்ன தம்பியளா இந்த பக்கம்? கோவிலுக்கு போறீயளா" என்றார் அந்த பெரியவர். "ஆமாங்க, இங்கிருத்து கோவில் எவளவு தூரம்" என்றோம். "4 கிலோமீட்டர் இருக்கும் தம்பி" என்றார். கூட இருந்த லுங்கி partyயோ "ரோடு வழியா போனா 4 கிலோமீட்டர். இப்புடியே காடுவழியா குறுக்க போனா ரெண்டு, ரெண்டரை கிலோமேடர்ல கோவில் வந்திரும்"னு சொன்னார். அதுக்கு அந்த பெரியவர், "எலே கூறு கேட்ட பயலே, யார காட்டு வழியா போக சொல்லுறே" என்று கையில இருந்த அருவாளை ஓங்கிவிட்டு, "தம்பி நீங்க ரோட்டு வழிய போங்கப்பா" என்றார், "அட பாவிகளா, அந்த கரடிகிட்ட இருந்து தப்பிச்சி வந்து இந்த ரெகுடிகிட்ட மாட்டிகிட்டோமே" என்று நெனச்சிகிட்டிருந்தேன். அப்போது சோமு "ஏங்க நாங்க இந்த மலை மேலயே காட்டு பாதை வழியா நடந்து வந்துட்டோம், இதுல போறது என்ன அவ்வளவு கஷ்டமான்னு", ரோட்டில் போன பக்கிகளை, காட்டுக்குள் இழுத்து விட்டான், சுந்தரோ "ஆமா.. ஆமா.. 20 கிலோ மீட்டர் மலை பாதைல வந்தாச்சி, இன்னும் வெறும் 2 km காட்டு பாதைல போக முடியாதா?", தன் பங்குக்கு ஏழரை கூட்ட.. ஜகன், "நான் என் friends கூட பல தடவ இந்த குறுக்கு வழில தான் போயிருக்கேன்" என்றான். அந்த பெரியவர், "சரி அப்ப இப்படியே குறுக்கால சூரியன பாத்தே போங்க, ஆனா வெரசா போகணும், சூரியன் மறஞ்சு போச்சின்னா அம்புட்டுகிருவீங்க, கையில battery light ஏதும் இருக்கா" என்றார், நாங்க எல்லாரும் ஜகனிடம் இருக்கா என்று கேட்க ஜகன் உதட்டை பிதுக்கினான். ஆபத் பாண்டவன், அனாத ரட்சகன் எங்கள் ராஜேஷ், "don 't worry I have a torch லைட்" என்றான். "அப்ப சீக்கிரமா போங்க" என்று அனுப்பி வைத்தார் அந்த பெரியவர். எனக்கும் ராஜேஷுக்கும் 'மீண்டும் காடா' என்ற பீதி இருந்தாலும் 4 கிலோமீட்டர் நடப்பது குறையுமே என்று சபலத்தில் காட்டுக்குள் நடந்தோம்.

ராஜேஷின் BHEL Pen Torch

மணி 6 :15 இருக்கும், நடக்க ஆரம்பித்து ஒரு 20 நிமிடங்களில், அடர்ந்த காடு எங்களை சூழ்ந்து கொண்டது, ஒரே ஒரு ஒத்தயடிபாதை, ரெண்டுபக்கமும் சில இடங்கலில் புல்லும், சில இடங்களில் அடர்ந்த மரங்களும் இருந்தது. அனகோண்டா படத்துல வர்ற சூனிய காடு மாதிரியே இருந்துச்சி. சூரியன் நாங்க எதிர்பார்த்தத விட வேகமா மறைய ஆரம்பிச்சது. சூரியன் இப்போ Red கலர் Rayban glassக்கு மாறியது போல, வானம் செந்நிறமானது. மணி 6 :45 இருக்கும், ஒரு இடத்துல ஒத்தயடி பாதை மூன்றாக பிரிஞ்சுது, எந்த வழில போறதுன்னு ஒரு குழப்பம். அந்த பெரியவர் சூரியனை பாத்தே போங்கன்னு சொன்னதனால சூரியனை தேடினோம், ஆனா சூரியன காணோம். எங்கயோ பொய் மறஞ்சுகிட்டு எங்களை dealil விட்டது. ஜகன் சொன்னான்," அந்த அரப்பலீஸ்வரர் மேல பாரத்தை போட்டுட்டு straightaa நடப்போம்"னு. சுந்தர் முகத்தில் பதட்டம், என் வயிற்றில் பிரட்டல், ராஜேஷ் pant lighta wet. சோமுவும் ஜெகனும் எங்களை வழி நடத்த ஆரம்பித்தனர். இருள் எங்களை சூழ ஆரம்பித்தது, அடுத்த 10 நிமிடங்களில் மைபூசிய வானத்தில் வெண்ணிற போட்டு வைத்ததுபோல் சந்திரன், எங்கள் கண்களுக்கு சிறிது வெளிச்சம் கொடுத்தது. அப்போது தான் ராஜேஷின் torch lightai வெளியில் எடுக்க சொன்னோம். ராஜேஷும் எடுத்தான், அதை பார்த்த உடன் மீண்டும் எங்களுக்கு அதிர்ச்சி. என் ஆள்காட்டி விரல் சைசிளிருந்த ஓர் pen torch. அதுவும் ராஜேஷின் அப்பாவிற்கு BHELல் ஓசி கொடுத்தது. அந்த torchஐ பார்த்த உடனே நான் முடிவு பண்ணிட்டேன் 'நாம இன்னக்கி கழுதபுலி கடிச்சி தான் சாகப்போரோம்'னு. அவன வாயில வந்ததெல்லாம் சொல்லி திட்டி புட்டு இப்ப என்ன பண்ணலாம்னு யோசிச்சோம். மணி 7 :15 இருக்கும், காட்டுக்குள் ரொம்ப தூரம் வந்தாச்சு, இனி திரும்பி போனாலும் ரொம்ப நேரமாகும், கைல இருந்த என்னோட NOKIA 2100ல நல்ல வெளிச்சம் வரும், அத வச்சி எப்புடியாவது சமாளிச்சி போயிரலாம்னு முடிவு பன்னி, ஜகன் கையில் வெளிச்சத்துக்கு cellphone குடுத்துட்டு திரும்ப one by one , first ஜகன், next சோமு, next me, next ராஜேஷ், next சுந்தர் இந்த வருசைல ஒருவன் பின்னாடி ஒருவன் இருட்டுல நடக்க ஆரம்பிச்சோம். முன்னாடி இருந்து அனகோண்டா வந்தாலும், பின்னாடி இருந்து டைனாசர் வந்தாலும் முதல்ல என்னைய கடிக்காது, sidela இருந்து வந்து அலலைல கடிச்சா மட்டும்தான் எனக்கு ஆபத்து, அதுக்கு வாய்ப்பு கம்மிங்கறதால I chose the middle spot. துன்பம் ஒருவனுக்கு தொடர்ந்து வந்தால் அவனுக்கு பயம் நீங்கி வாழ்க்கை மரத்து போயிரும்னு கேள்விபட்டிருப்பீங்க, அந்த நிலையில தான் நான் இருந்தேன். இனி எப்படியும் வீட்டுக்கு பொய் சேர போறது இல்ல, சாகுறது சாகப்போறோம், அஞ்சு பேர்ல நாம தான் கடைசியா வீர மரணம் அடையணும்னு முடிவு பண்ணி, நடந்துட்டிருந்தேன்.

தகிலின் உச்சம்

பசி, இருட்டு, கரடு முரடான ஒத்தயடி பாதை, திகிலூட்டும் அமைதி, அப்ப அப்ப கேட்டு அடங்குர நரி ஓலம் வேற. எங்கள சுத்தி என்ன என்ன மிருகங்கள் எங்கள வெச்சி dinnerkku பிளான் பண்ணிக்கிட்டு இருக்குன்னு தெரியாம போயிட்டிருந்தோம். பசிக்கிதுன்னு எவன்ட்டயாவது சொன்னா, இந்த மரண போராட்டத்துல உனக்கு சோறு கேக்குதான்னு திட்டுவானுங்க, அதுனால என்னோட backpackஅ frontpackaஅ மாத்தி, உள்ள வெச்சிருந்த பிரட் packeta ஓபன் பன்னி, யாருக்கும் தெரியாம மொசுக்க ஆரம்பிச்சேன். பாதையில் ஒரு தடங்கல், திடீர்னு பாதை பாறைகளாக படி படியாக கீழே இறங்க ஆரம்பித்தது, ஒரு நான்கு, ஐந்து படிகள் இறங்கியதும் மீண்டும் சம வெளி. சமவெளியில் ஒரு குன்று, குன்றிலிருந்து தாவிவரும் ஒரு நீரோடை, என்ன அருமையான ஒரு location . ஆனால், discovery, animal planet போன்ற cannelஅ எல்லாம் காட்டுக்குள்ளே, தண்ணி இருக்க இடத்துக்கு பக்கத்துல தான் எல்லா மிருகங்களும் சுத்திக்கிட்டிருக்கும்னு அதுல பலதடவ கிலிய கெளப்பீருக்கானுங்க. so , வேக வேகமா அந்த ஒடைய முட்டியளவு தண்ணிக்குள்ள இறங்கி கடந்து மீண்டும் கரைக்கு வந்து, மெல்ல மெல்ல இறங்கியது போலவே படிகள்ள ஏறி மீண்டும் மரங்கள் நிறைந்த பகுதிக்கு வந்தோம். இப்படி திகிலோட அரை மணிநேரம் கடந்தது. எங்கள் வெற்றி பயணத்தில் மீண்டும் ஒரு சோதனை, அங்க திரும்பவும் இரண்டு பாதை பிரிஞ்சது, இப்ப எந்த பாதையில போரதுன்னு திரும்ப குழப்பம். ஒரு பாதை நேராகவும், இன்னொரு பாதை, வலது புறமா கொஞ்சம் மேல் நோக்கியும் போனது. இனியும் இத தொடர்ந்தால், கண்டிப்பாக விபரீதம் தான் என்று எல்லாரும் சேந்து ஒரு முடிவு எடுத்தோம். சுந்தர், சோமு, ராஜேஷ் மூணு பெரும் இப்ப நிக்கிற அதே இடத்துல ஒருத்தன் கைய ஒருத்தன் புடிச்சிகிட்டு, அங்கேயே நிக்கணும், நானும் ஜெகனும், வலதுபுறமா போர பாதையில கொஞ்சதூரம் cellphoneனோட போய் ரோட்டுபக்கம் ஏதும் இந்த பாதை போய் சேருதானு பாத்துட்டு வரதாவும் plan பண்ணி கெளம்பினோம். இவ்வளவு தூரம் நான் தானே முன்னாடி போனேன், இப்ப நீ முன்னாடி போடான்னு ஜகன் என்ன பலிகடா ஆக்கிட்டான், சரி ஏற்கனவே பாதி உயிர் போயிரிச்சு இனி பாதி தானே, போனா போகட்டும் போடான்னு நானும் தைரியமா முன்னாடிப் போனேன். கெளம்பின இடத்தில இருந்து ஒரு நிமிட ஏற்றதுல மேல நின்னு பார்த்தோம், கீழ பசங்க நிக்கிறதே எங்கள கண்ணுக்கு தெரியாத அளவுக்கு இருந்தது. அந்த பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எந்த வெளிச்சமோ, ரோடோ தெரியல. தொடர்ந்து கொஞ்ச தூரம் போய் பாகவானு கேக்கலாம்ன்னு நான், "சுந்தர்"னு கத்தினேன், அவன், "எங்கடா இருக்கீங்க"ன்னு கத்தினான், இங்க இருக்கோம்னு செல்போன தூக்கி ஆட்டி காட்டினேன், அதற்க்கு சுந்தர், "இங்க ரொம்ப பயமா இருக்கு ஒண்ணுமே தெரியல நீங்க போக வேண்டாம் சீக்கிரம் கீழ வந்திருங்க எதா இருந்தாலும் சேந்தே போவோம்"னு சொன்னான். சரின்னு ரெண்டுபேரும் கீழ இறங்கி வந்துட்டோம்.

Reverse Gear

எல்லாரும் ஒன்னுகூடி, திரும்பி போயிறலாம், இனியும் வனத்தோட ஆழத்தை நாம சோதிச்சி பாத்தா அது நம்ம முட்டாள் தனம்னு முடிவு பன்னி, வேர வழியே இல்லாம reverse gearil வந்த பாதையில திரும்ப நடக்க ஆரம்பிச்சோம். அதுல என்ன சிக்கல்னா. மீண்டும் அந்த ஒடைய கடக்கணும், ஒரு தடவ அத கடக்கும்போதே எந்த மிருகம் எங்க படுத்திருக்கு, முதலை இருக்கா, பாம்பு இருக்கானு தெரியாம தப்பி பொழச்சி வந்தோம், இப்ப திரும்ப அத கடக்குறது தான் மிக பெரிய survival challengeஅ இருந்தது. இந்தமுறையும் கீழிறங்கி, ஒருவர் பின் ஒருவராக கைய புடிச்சிகிட்டு முழங்கால் அளவு தண்ணீர் இருந்த ஓடையை கடந்து மேலேறி, உயிர்பிழைத்து வந்தோம். இதுக்கப்புறம் நாங்க ஏற்க்கனவே நடந்து வந்த பாதைங்கறதால, வேகமா நடக்க முடிஞ்சது. கொஞ்சம் நல்ல வேகமாகவே நடந்தோம். நான் மீண்டும் என் breadஐ மொசுக்க ஆரம்பிதேன். ஒருமணிநேரம் நடந்த இடத்தை நாங்க திரும்பி வரும்போது 20 நிமிடத்திலேயே அடைஞ்சிட்டோம். இப்ப நாங்க first குழம்பின அதே இடம், மூன்று பாதை பிரிஞ்சு எங்கள வறுத்து எடுத்ததே அதே இடம். எங்கிருந்து வந்தோம்னே எங்களுக்கு தெரியல. சரி இந்த மூணு பாதையுமே இனி காட்டுக்குள்ள போகல எதோ ஊருக்குள்ள தான் போகுதுன்னு உறுதியா தெரிஞ்சனால, ஏதோ ஒரு பாதையில நடந்தோம், கொஞ்ச நேரம் நடந்த பிறகு, இது கண்டிப்பா நாம வந்த பாதை இல்லை, இது வேர பாதைன்னு நல்ல தெரிஞ்சாலும் நடந்தோம், நடந்தோம் நடந்துகேட்டே இருந்தோம்.

வழிகாட்டிய வள்ளல்

கடைசியாக ஒரு கண்கொள்ளா காட்சி. தூரத்தில் ஒரு ஒத்தை கூரை வீடு, அதில் மஞ்சள் குண்டு bulp . வீட்டுக்கு பின்புறமா இருந்து ஒரு முன்டாசுகட்டிய மனிதன் எங்களை கவனிக்க. நாங்கள் அவரை நோக்கி ஓடினோம். அவர் எங்களை நோக்கி நடந்து வந்து, "என்னப்பா நீங்க, இந்த நேரத்துல காட்டுகுள்ளருந்து வரீங்க, வழிதவரீட்டின்களா" என்றார். "ஆமாங்க, நாங்க கோவிலுக்கு போக, இப்புடி நடந்து குறுக்கு பாதை வழியா போனப்ப காட்டுக்குள்ள மாட்டிகிட்டோம்" என்றோம். "எந்த முட்டா பய 6 :00 மணிக்கு மேல உங்கள காட்டுவழியா போகசொன்னவன், நாங்களே இருட்டு கட்டிரிசின்னா, ஆடு மாட கூட மேய விட மாட்டோம், நீங்க என்னன்னா சின்னபுள்ள தனமா இப்புடி வேலாண்டுகிட்டு இருக்கீங்க. சரி நீங்க மட்டும்தானா இல்லே இன்னும் யாராவது உள்ள மாட்டிகிட்டு இருக்காங்களா" என்றார். "இல்லங்க நாங்க மட்டும்தான்" என்றோம். "அந்த மரபலீஸ்வரந்தான் உங்கள காப்பாத்தி விட்டுருக்கார். உள்ள யாராவது மாட்டிருந்தாலும் அவங்களா வந்தா தான் வேற யாரும் இந்த நேரத்துல உள்ள போக மாட்டாங்க இனி காலைலதான்" என்றார். "சரி எங்களுக்கு கோவிலுக்கு போக வழி காட்டுங்க நாங்க கேளம்புரோம்னு" சொன்னோம். "கோவிலுக்கு இப்ப போய் என்ன பண்ண போறீங்க? மணி 9 :00 ஆச்சி, கோவிலும் இருக்காது ஒரு கடகன்னியும் இருக்காது. ஏதாவது சாப்டீங்களா" என்றார். எல்லாரும் "இல்லை" என்று கோரசா சொன்னாங்க. நான் மட்டும் வாயிலிருந்த bread வெளியில் தெரியாமல் அதக்கிகொண்டேன். "இப்ப என்ன பண்ண போறீங்க" என்றார்." இங்க பக்கத்துல ஏதாவது கடை இருக்கா?" என்றோம். "ரோட்டு மேல ஒரு கடை இருக்கும் , சரி வாங்க அந்த ஆள போய் பாப்போம்" என்று எங்களுடன் அவரும் துணைக்கு வந்தார். அந்த கடைல போயி, ஒரு கோத்த உள்ள விட்டுட்டு nightu ஒரு தூக்கத்தை போடலாம்னு நினைச்சோம். அங்கிருந்து அரைகிலோமீட்டர் தூரம் சீரில்லாத வயல் வெளி மற்றும், மேடும் பள்ளமுமான இடங்களிலிருந்த வீடுகளை கடந்து போய் தார் ரோட்டில் இருந்த அந்த கடையை அடைந்தோம்.

அடைக்கலம்

"இதாம்பா கடை, இருங்க வரேன்" என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு வீட்டுக்கு சென்றார். அவர் கடைன்னு சொன்ன இடத்துல ஒரு துணி துவைக்குற கல்லைதவிர வேறு எதுவும் இல்லை. போனவர் அந்த வீட்டு கதவைதட்ட, கதவ தெறக்கவே ரொம்ப நேரமாச்சி, அப்பறம் வீட்டுல இருந்து ஒருத்தர், வெளிய வந்து இவர்கிட்ட எதோ பேசி சின்ன சல சலப்பு நடந்தது. அப்பறம், இவர் எங்கள காட்டி எதோ சொல்ல அப்பறம் எங்களை அவர்கள் வீடு பக்கத்துல கூப்பிட்டு, அந்த கடை காரரும், அவர் மனைவியும் "எங்க கடைல தேன் முட்டாயும், தேங்கா பார்பியும் தான் விப்போம், உங்களுக்கு நாங்க என்ன தர்றது"ன்னு" யோசிச்சிட்டு. கணவன் மனைவி ரெண்டு பெரும், discuss பன்னி, உப்புமா செய்துகொடுத்து, night தங்க இடமும் குடுத்து அடைக்கலம் தந்தனர். காலையில் எழுந்து, உணவு, இருப்பிடம் கொடுத்த மக்களுக்கு நன்றி கூறிவிட்டு நினைவுக்கு ஒரு photo எடுத்துட்டு கிளம்பி விட்டோம். 2km நடந்து. நீர்வீழ்ச்சிக்கு பொய் குளித்து விட்டு, மரப்பலீஸ்வறரை தரிசித்து, நாங்களும் trucking போனோம், trucking போனோம், trucking போனோம் என்று ஊர் வந்து சேர்ந்தோம்.

இந்த மொத்த triplayum, ஜகனை தவிர வேற ஒரு சின்ன ஜந்துவை கூட நாங்க பாக்கலைங்கறது தான் Highlight.

இதனால் அன்றுமுதல் நாங்கள் நால்வரும் , கொல்லிமலை சிங்கங்கள் என்றும், ஜகன் guideayya என்றும் போற்றப்பட்டான்.

2 comments:

  1. Excellent A.M. ChidambaraBhaarathi, your screenplay showed me like a mirror of the above said two parts of Kolli Malai Lions. Great doing, keep it up. Rocking Rockers.

    ReplyDelete
  2. Nalla than irukku.... Konjam fotos pottaena innum super aaa irukkum

    ReplyDelete