Friday, December 16, 2011

கொல்லிமலை சிங்கங்கள் - 1

நாங்களும் trucking போனோம், trucking போனோம், trucking போனோம்!

விபரீத ஆசை

எனக்கு ஒரு விபரீத ஆசை வந்தது. திடீர்னு வந்த ஆசை இல்ல அது. என்னோட MCA classmate ஜகன், துறையூர் பக்கத்துல உள்ள புத்தனாம்பட்டியில digree படிச்சப்ப, பக்கத்துல இருக்க புளியஞ்சோலைக்கும், அங்கிருந்து அப்படியே நடந்தே காட்டு பதை வழியா கொல்லிமலைக்கும் அடிக்கடி போயிருக்கதாக, அவனோட வீர கதைகளை அப்ப அப்ப அவுத்து விடுறது வழக்கம். ஜகன் ரெண்டு வருஷமா குடுத்த பில்ட்அப்புல கொஞ்சம் கொஞ்சமா வந்த ஆசை அது. என்னோட BCA classmate PNT சுரேஷோட சொந்த ஊரு புளியஞ்சோலைக்கு ரொம்ப பக்கம்ங்கரதனால, நாங்க digree படிக்கிற காலத்துல பலதடவ அங்க பொய் பீராடி,நீராடிருக்கோம். சுரேஷ் வீட்லருந்து அவங்க அண்ணன், தம்பிகள், அவனோட அப்பாடக்கர் சித்தப்பா, மற்றும் பல நண்பர்களும், எங்களோட மகிழ்ச்சில பங்கெடுதுக்குவாங்க. எங்களுக்காக அன்னைக்ககி பல கோழிகளும் ஆடுகளும் அழிக்கபடுவது வழக்கம். சோ ( அட துக்ளக் சோ இல்லங்க ஆங்கில so ) , நமக்கும் புளியஞ்சொலைக்கும் ஒரு நெருங்கிய பந்தமிருந்ததாலையும், ஏற்கனவே ஒருமுறை தரைவழி மார்கமா, கொல்லிமலைக்கு பொய் அதோட, அடர்ந்த வனத்தையும், அதிக tourist தொந்தரவில்லாத அமைதியையும் ரசிச்சி இருந்ததனாலயும், எனக்கு ஏற்பட்ட ஆசைதான் இந்த trucking ஆசை. நமக்கு தான் எங்கயுமே தனியா போய் சிக்கி பழக்கமில்லையா, சரி போறது போறோம் ஏதாவது scene ஆய்டுச்சுன்னா கூட்டமா scene அகட்டும்னு, என்னோட BCA classmate ராஜேஷ், சோமு, சுந்தர், சுரேஷ், தினேஷ் போன்ற பெரும்புள்ளிகளிடம் சொல்ல, உற்சாகம் பெருக்கெடுத்தது.

வீர பயணம்

ஒரு சூனியம் கவ்விய மதிய வேலையில, Trucking கிளம்ப காயத்ரி டீ ஸ்டாலில் கூடினோம். சுரேஷ் வழக்கம்போல ஆயா ஆப்கானிஸ்தான் போராஹ, பாட்டி பாகிஸ்தான் போராஹ என்று கடைசி நேரத்துல உஷாரா கல்தா குடுக்க. தினேஷ், ஏசுவால் இரட்சிக்கப்பட்ட புனிதாத்மாங்கரதால அவனும் escape. நான், ராஜேஷ், சோமு, சுந்தர் நாலு பேரும் பாவம் மட்டுமே செஞ்ச பதர்கள்ங்கரதனால ஜகன் தலைமையில எங்க வீர பயனத்த தொடங்கினோம். ஜகனை drop பண்ண வந்த என் MCA mate JK , சோமுவோட உருவத்தையும் சுந்தரோட உருவத்தையும் பார்த்து வியந்து, இந்த trip சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக்கொள்வதாக வாழ்த்திவிட்டு சென்றான். ஜகன் தான் எங்கள அடுத்த 24 மணி நேரம் guide பன்ன போரதால, ஜகனுக்கு guideayyaன்னு பேர் வெச்சான் சோமு. ஜகன் என்னோட MCA mate , மற்ற மூவரும் என்னோட BCA Mates , இவர்களுக்கு இடையில் அவ்வளவாக பழக்கமில்லாத காலமென்பதால், அப்ப அப்ப சார், யோவ், ஏங்க என்று பேசி என் மண்டையில சூட்ட கேளப்பினானுங்க. எங்க guideayya அறிவுரைப்படி எல்லாரும் ஆளுக்கொரு 2 litre water Bottle , bread , jam , butter போன்ற இத்யாதிகளை எங்க damageஆனா backpackல load பன்னிருந்தோம். திருச்சியிலருந்து பஸ் ஏறி, ஒன்றரை மணி நேர பயணத்துக்கு அப்பறம், புளியஞ்சோலை வந்து சேர்ந்தோம்.

டவுசர் கிழிய நடந்தோம்

Bus standல இருந்து புளியஞ்சோலை நீரோடை பகுதிக்கு நடந்து வரதுக்கு முன்னாடியே நாக்கு தள்ள ஆரம்பித்தது, மணியோ பகல் 11 , முதுகிலோ சுமை , வயிற்றிலோ பசி, அடுத்தென்ன பக்கத்துல இருந்த ஆப்ப கடையில பூந்து half boil, omletteன்னு அலப்பறையாக அள்ளி கொட்டிகொண்டோம். மணி பகல் 12, புளியஞ்சோலைல இருந்து காட்டு மலைப்பாதை வழியா சுமார் 20 km நடந்தால் கொல்லிமலை போய்செந்து நாங்களும் truking போய்டோம், truking போய்டோம், truking போய்டோம் என்று வெற்றி மாலை சூடிரலாம். ஆனா இப்புடி வாயில வடை சுட்டா நல்லாத்தான் இருக்கும், நடந்து பாத்தா தான் தெரியும் டவுசர் எப்புடி கிழியும்னு. guideayya கணிப்பு படி இரண்டரை, அதிகபட்சம் மூணு மணி நேரத்துல கொல்லிமலை போய்செந்துரலாம். So ஓடையில ஒரு குளியலப்போட்டுட்டு fresha பயணத்தை தொடர்ந்தபோது மணி 12:30. மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தோம், மலைபாதைனதும், பச்சைபசேலென்ற பாசிபூத்த, பாறைகளும், சில்லென்ற காற்றும்னு தமிழ் சினிமா டூயட location மாதிரி mistuக்கு நடுவுல உங்க figurea கூட்டிட்டு டூயட் பாடலாம்னு நினைக்கிற கேவலமான mind voice நல்லாவே கேக்குது. உங்க உணர்ச்சிவசத்த கொஞ்சம் கட்டுபடுத்துங்க bossu , பங்குனி வெயிலு பல்லகாட்டிகிட்டு அடிக்கிது mistஆமுல mistu. காஞ்சு போன மரங்களும், தீஞ்சு போன பாறைகளும்தான் வழிநெடுக. மலைபாதைங்கரதனால, வழி மேல்நோக்கி படிபோல இருந்தது, அதுவும் சீரான நேரான படிகள் இல்லை, சிறு சிறு பாறைகளால் இயற்கையாக உருவான படிகல்ன்தறதால, ஒரு படி சிறுசாவும் ஒரு படி ரொம்ப பெருசாவும் கால அகட்டி அகட்டி வைக்கவேண்டியிருந்ததால, எங்கள் டவுசர் கிழிய ஆரம்பித்தது. பாதை தவிர ரெண்டு பக்கதிலயும் பெரிய பெரிய பாறைங்களும், கொஞ்சம் அடர்த்தியான காய்ந்த மரங்களும் durra கேளப்புரதுக்குன்னே இருந்தது. அரைமணி நேரம் நடக்குரதுக்குல்லையே எங்களோட மொத்த energyயும் burnஆகிரிச்சு. சோமு 104 கிலோ, சுந்தர் 90 கிலோ, ராஜேசும் நானும் சுமார் 85kilo இருந்தோம். ஜகன் மட்டும் எங்கள் முன்பு சிறிய பிராணிபோல 50 kiloவில் இருந்துகொண்டு யானைகளை மேய்க்கும் பாகன்போல ஜகன் எங்களை மேய்க்க ஆரம்பிச்சிட்டான். Come on guys , Hurry up Hurry upன்னு ஜகன் பீட்டர் விட எங்கள் அனைவர் காதிலிருந்தும் புகை. சரி மேல ஏறி அப்பறமா இவன கவனிப்போம்னு விட்டு வைத்தோம்.

கரடி கக்கூஸ் போனமாதிரி ஒரு Sound

மீண்டும் நடக்க ஆரம்பித்து ஒரு அரைமணி நேரம் விடாது நடந்தோம், மணி 1 :30 to 2 :00 இருக்கும், திடீரென்று கரடி கக்கூஸ் போன மாதிரி ஒரு சவுண்ட். எல்லார் முகத்துலையும், பீதி. எல்லாரும், ஜெயஹிந்த் பட அர்ஜுன் & co போல ஒண்ணா சேந்து நின்னோம். சத்தம் நின்று விட்டது, மீண்டும் நடந்தோம் மீண்டும் சத்தம், நின்றோம் நடந்தோம், சத்தம் கேட்டு கேட்டு நின்றது, என்னவா இருக்கும்னு எல்லாரும் ஒன்னு கூடி யோசிச்சோம், மலைப்பாதையில் கரடிகள் அதிகம்னு பலபேர் பீதியை கெளப்பி விட்டது ஞாபகத்திற்கு வர, guideayyaவிடம், ஜகன் நாம மாட்டிகிட்டோமா என்று பீதி பெருக்கெடுக்க கேட்டான் ராஜேஷ். அதற்ககு guideayya don't worry , எங்கிட்ட ஆயுதம் இருக்கு என்றான். Guideayyaa நீங்க எங்களுக்கு கெடச்ச தெய்வ guiduன்னு சொல்லி, ஆயுதத்தை எடுங்க, இன்னக்கி அதுவா, நாமளானு பாத்துருவோம்னு சொன்னான் சோமு. இதற்கிடையில் சத்தம் அதிகரிக்க, பீதியில் பேதி போகாத குறையாக durge ஆகி நின்னுட்டிருந்தோம் நானும் சுந்தரும். ஜகன் அவனோட backpackஅ கலட்டி அவன் கிட்ட இருந்த ஆயுதத்தை எடுத்தான் பாருங்க, அதுவரை durgeஇல் இருந்த நாங்கள் டரியலானோம். எல்லாரும் ஓடுங்கடா என்று நான் அலற, ஜெகனை தவிர எல்லாரும் ஓடிய ஓட்டம், ஒன்றரைகிலோமீட்டார் மேல் நோக்கி ஓடினோம். நாங்கள் ஏன் திடீறன்று ஓடினோம் என்று புரியாத ஜகன் பின்னால் ஓடி வந்து ஏன்டா திடீர்னு ஓடிடீங்கன்னு கேட்டான். அது வரை ஜெகனை, guidayya , ஜகன் sir , நண்பா , என்றெல்லாம் அழைதுகொண்டிருந்த சோமு போடா கேன baadu , நாதேறி நாயே, காதறுந்த கழுதையே, மூக்கறுந்த நரியே என்ற ரேஞ்சுக்கு திட்ட காரணம்? ஜகன் உள்ளிருந்து எடுத்த ஆயுதம் தான். Breadஇல் வெண்ணையும் ஜாமும் தடவ use பண்ற வெண்ணை வெட்டி கத்தியைத்தான் ஆயுதம்னு சொல்லிருக்கான் ஜகன், அதையும் நம்பி சோமு கரடியுடன் சண்டைபோட ரெடியாகி இருக்கான்.

கவலைக்கிடமான சோமு

மரண பீதியிலும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஜெகனிடம் ஒரு நல்ல ஆயுதம் இருந்திருந்தால் சோமு உண்மைலேயே கரடிகூட சண்ட போட்டிருப்பானோ?இத சோமு கிட்ட கேட்டதுக்கு defenitelyன்னான். ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அட ஆண்டவா ஏண்டா இந்த மாதிரி ஜென்மங்கலோடலாம் என்ன சேர விடுறேன்னு நடையை கட்ட ஆரம்பித்தோம். மேல போக போக காட்டோட Terror அதிகமாகிட்டே போச்சி, எங்க energy level கொறஞ்சுகிட்டே போச்சு. சோமு, சுந்தர், ராஜேஷ், நான் இந்த வரிசைல எல்லாரும் பலவீனமடைய ஆரம்பிச்சிட்டோம், பத்து நிமிஷம் நடந்தா 15 நிமிஷம் ரெஸ்ட், இந்த ரேஞ்சுல போய்கிட்டிருந்தோம். குட்டி ஜந்து ஜகன் மட்டும் Come on guys Come on ன்னு சீன் போட்டுகிட்டே இருந்தான். ஒருமணி நேரத்துக்கு அப்புறம் சோமு நிலைமை திடீர்னு ரொம்ப மோசமாயிரிச்சி, கொண்டு போன தண்ணி வேர கோறஞ்சுபோச்சு, சோமுவுக்கு மூச்சு திணறல் அதிகமா இருந்தது, ஒரு stagekku மேல சோமுவ மூட்டையா கட்டி நாலு பெரும் தூக்கிகிட்டு கீழ reverse வந்துரலாமானு யோசிச்சோம், ஆனா அப்படி வந்தா எங்க நாலுபேரையும் பாடையில கட்டிதான் ஊருக்கு கொண்டுவந்திருக்கணும். சோமு 104 கிலோ இதெல்லாம் நடக்கற காரியமான்னு நெனச்சப்போ சோமு confidenta ஏறிறலாம்னு சொன்னான். ஆனால் ஜகன் கிட்ட இன்னும் எவ்வளவு தூரம், எவ்வளவு தூரம்னு கேட்டு தொல்ல பண்ணிகிட்டே வந்தோம். இன்னும் கொஞ்ச தூரத்துல பாறைகள், குகைகள் இருக்கும் ஒரு இடம் வரும் அங்க பொய் half an hour rest எடுப்போம். அங்க போய்டா 90 % completedன்னு சொன்னான்.

பெருசுகளின் சேட்டை

சரி வந்துட்டோம் திரும்பிபோனா, புறமுதுகு காட்டிய கொழைகல்னு இந்த உலகம் நம்மள தப்ப பேசும்னு, எல்லாரும் திரும்ப ஏற ஆரம்பிச்சிட்டோம். மணி 4 : 30 இருக்கும், சூரியன் மலைக்கு பின்னால் ஒழிய ஆரம்பிச்சது. மரங்கள் கொஞ்ச கொஞ்சமா கொறஞ்சு வெறும் பாறைகள் மட்டுமே அதிகமா இருந்தது. ஒரு இடத்தில ரெஸ்ட் எடுக்கறதுக்கு ஏத்த மாதிரி பாறைகள் குகைகள்னு நல்ல location, ஆனா அத ரசிக்கிற நிலைமைல நாங்க இல்லை. அதுதான் ஜகன் சொன்ன location. அப்பாடா ஒருவழியா 90 % reach பண்ணியாச்சு இனி சீக்கிரம் போயிரலாம்னு இருந்தப்ப தான் ஜகன் ஒரு குண்ட தூக்கி போட்டான். உயரமான பகுதில நின்னு பார்த்தா யாருக்காவது தல சுத்துமானு கேட்டான். அவன் கேட்ட உடனே எனக்கு தலையெல்லாம் சுத்த ஆரம்பிசிரிச்சு, செத்துப்போன தாத்தா, பாட்டியெல்லாம் என் கண்ணுல தெரிய ஆரம்பிச்சிடாங்க. இல்ல.. இனி நடக்க வேண்டிய பாதை ஒரு 10 % தான், but கொஞ்சம் risk இருக்கும். எல்லாரும் என் பின்னாடி அல்லகட்டி வாங்கன்னு சொல்லி கூட்டிக்கிட்டு கேளம்பினார் எங்கள் guideayyaa. அப்போ ரெண்டு பெருசுங்க நாங்க வந்த பாதையிலேயே வந்து, எங்கள எங்க போறீங்க, என்ன பண்றீங்கன்னு விசாரிச்சுதுங்க. சீக்கிரம் கெளம்பி இருட்டுறதுக்குள்ளே ஊருக்குள்ளே போயிருங்கன்னு ஒரு பீதிய கேளப்பிவிட்டுட்டு போயிரிச்சுங்க. நாங்க பாத்துகிட்டு இருக்கும்போதே சர சரன்னு மலை மேல ஏறி விறு விறுன்னு போய்கிட்டே இருந்ததுங்க. நாங்க நஞ்சுபோன நாரக்காமாதிரி ஏரிகிட்டிருந்தோம். அவங்க 20 நிமிஷம் ஏறி, ஒரு பாறைல உக்காந்து, நாங்க வரத பார்த்து ரசிச்சி சிரிச்சி எங்கள கமெடி pieceஅ use பண்ணி டைம் பாஸ் பண்ணிச்சிங்க. நாங்க அதுங்க உக்காந்து இருந்த இடத்துக்கு போக ஒருமணி நேரமாச்சு. அப்பறம் இனிமே ஒன்னும் தூரம் இல்லே பாத்து சில்லுன்டிதனம் பண்ணாம போய் சேருங்கன்னு அட்வைஸ் வேர பண்ணிபுட்டு, எங்க வீடு இங்க பக்கம் தான்னு சொல்லி அதுங்க ரெண்டும் escape ஆகிரிச்சிங்க.

மரணத்தின் விளும்பு

சரி pointக்கு வருவோம், ஜகன் சொன்ன அந்த point வந்திருச்சு. மலையோட உச்சிக்கு வந்தாச்சி ஒரு பெரிய குன்று அதோட அந்த பக்கம் போய்ட்டா ஊருக்குள்ள போயிறலாம் ஆனா அந்த குன்று மேல ஏறி அந்த பக்கம் போக வாய்ப்பு இல்லை, அந்த குன்ற சுத்தி தான் போகணும். குன்ற எப்புடி சுத்துறது? இப்ப leftல குன்றோட ஒரு பகுதி, rightla சாவோட ஒரு பகுதி. ஆமா, கீழ விழுந்தா வீட்டுக்கு body பீடி sizeல கூட போய் சேராது, அவ்வளவு பெரிய பாதாளம். நடக்கறதுக்கு எவ்வளவு பெரிய இடம் தெரியுமா? ஒரு ஆள் ரெண்டு கால வெச்சி நிக்கலாம், கொஞ்சம் கவனக்குறைவா நின்னாலும் வைகுண்டம் waiting . இதுல, one by oneஅ போகணும், இத கடந்துட்டா எங்க trucking முடிஞ்சிரும். ஆனா மரண பயம் எனக்குள்ள heavyஆ உள்ள பூந்து மண்ட மயானத்துக்கு போகுர மாதிரியே ஒரு feeling. என்னைய தவிர எல்லாரும் ரெடியா இருக்காங்க, நான் மட்டும் வாங்க திரும்பி போயிரலாம்னு சொல்லி ஒரே அடம். ஆனா எவனும் கேக்கறதா இல்லே. சரி தனிதனியா போக வேண்டாம், எல்லாரும் கைய கோர்த்து பிடிசிகிட்டு one by oneஅ போகலாம், suppose கீழ விழுந்தா எல்லாரும்தான் விழுவோம் நீ மட்டு தனியா விழ வாய்ப்பே இல்லேன்னு சொல்லி என்னைய சமாதானபடுத்தினாங்க. எமன் என்னைய பார்த்து எகத்தாளமா சிரிச்சிகிட்டு இருந்தாலும், அந்த dealing எனக்கு புடிசிருக்கவே நானும் ஒகே சொல்லிட்டேன். மெது மெதுவா நடக்க ஆரம்பிச்சோம், நான் leftla பாறையோட பாறையா ஒட்டி நடந்தேன், மலைல ஒரே முள்ளுசெடி. சட்டை, கை, முதுகு எல்லா எடத்துலயும் கிழிச்சிது. ஜகன், டேய் முல்லுடா கொஞ்சம் தள்ளி வாடான்னான். எல்லாரும் கீழ விழுந்திருவோம் பரவா இல்லையான்னு கேட்டேன். உயிர்பொர நேரத்திலையும் உனக்கு எவ்வள்ளவு நக்கல்டான்னு பேசிக்கேட்டே மலைய கடந்துகிட்டிருந்தோம், அப்ப ராஜேஷ், சுந்தர் ரெண்டு பேர் முகத்தையும் பாத்தேன். மரண பீதியில அவனுங்க மூஞ்சிய பாக்க, எனக்கு ஒரே சிப்பு சிப்பா வந்துச்சு. அப்படியே minda divertpanni பாதாளத்தை பாக்காம, கொஞ்சம் கொஞ்சமா, குன்றின் அந்த பக்கம் வந்துட்டோம் அப்ப மணி 6:00. எங்களோட அஞ்சரை மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாலை பொழுதின் மயக்கத்திலே

அந்த இனிய மாலைபொழுதில், சூரியன் yellow color FasTrack cool glass அணிந்திருந்ததால், வானம் மஞ்சள் குளித்து இருந்தது, அந்த மாலை பொழுதின் மயக்கத்திலே, நாங்கள் புத்துயிர் பெற்று ஒரு வேற்று கிரகத்திற்கு வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு. உயிரோடு தான் இருக்கிறோமா, இல்லை அனைவரும் அல்பாய்ஸில் பரலோகத்துக்கு வந்துவிட்டோமா என்று எண்ணுமளவிற்கு சொர்கபுரியாக காட்சி தந்தது அந்த மாலை பொழுது. ஒரு உலக மகா சாதனைய புரிஞ்ச சந்தோசத்துல நாங்க எல்லாரும் துள்ளி குதிச்சி சந்தோசமா ஆடி ஊருக்குள்ளே நடந்தோம், இனி மலை இல்லை, பாதாளம் இல்லை, தனிமையில்லை, கரடிபயமில்லை, ஜெகனின் 'come on , come on ' இல்லை, மக்களோடு மக்களாக இயற்கை எழில் கொஞ்சும் அருவியில் போய் குளிக்கலாம். எங்கள் உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கல், மண் ரோடுகளை கடந்து தார் ரோடு வந்து அடைந்தோம். கொல்லிமலை ஒரு சிறிய மலை கிராமம்ங்கரதால அங்க தங்குறதுக்கு பெருசா ஒன்னும் hotels கிடையாது. கொல்லிமலையில் அரப்பலீஸ்வரர் கோவில், அதுக்கு பக்கத்துல இருக்கும் Water Falls ரெண்டும் ரொம்ப famous. கோவில் பக்கத்துல சில cottages இருக்கும், so இப்ப அந்த கோவிலுக்கு போகணும். அடுத்து நாங்க பாக்குற ஆள் கிட்ட கோவிலுக்கு போறது எவ்வளவு தூரம்னு கேக்கணும். டவுசர் கிழிய நடந்து வந்ததால், எல்லாரும் செம tired .

வீர பயணம் தொடரும். . . . . .

3 comments:

  1. Come on Come on okkk than trouser kilinchathum ok than mamanoda panchayatu mattum missing...plus Jaganoda explanation anga anga irrunthurukumae athu enga...over all superb machan somuvoda yei vooi konjam missing...

    ReplyDelete
  2. missana ellam naan livea ve katturen macaha...lets go for the trip...polama!

    ReplyDelete
  3. Was laughing my head off on reading this "கரடி கக்கூஸ் போனமாதிரி ஒரு Sound".... Super da!!!!

    Guideayya.... I am ready... Let's go!!!

    ReplyDelete