Friday, May 30, 2008

அரை என் 305ல் கடவுள்

கடந்த வாரம் அறை என் 305ல் கடவுள் படம் பார்க்க நேர்ந்தது. அற்புதமான கதையை அழகான திரைகதை மூலம் இனிமையாக படமாக்கி இருந்தர்கள். படத்தில் ஒரே குறை என்று சொன்னால் அது மென்பொருள் வல்லுனர்களை பற்றிய கருத்துக்கள் தான். சமீப காலத்தில் தமிழ் சினிமாக்களில் மென்பொருள் வல்லுனர்களை தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முதலில் கற்றது தமிழ் படத்தில் மென்பொருள் வல்லுனர்களால் தான் விலை வாசி உயருகின்றது என்றும், அவர்கள் அளவுக்கு அதிகமாக சம்பாதிப்பதால் மற்ற துறையை சேர்த்தவர்கள் இவர்கள் அளவிற்கு செலவு செய்ய முடியாமல் ஊரை விட்டு ஒதுக்கு புறமாக வாழ வேண்டியுள்ளது என்ற ஆணித்தரமான உண்மையை அற்புதமாகவும் நாகரீகமாகவும் சொல்ல்லி இருந்தார்கள். அது மட்டிமின்றி அவர்கள் துறையில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகள் பற்றி லேசாக தோட்டும் தொடாமலும் சொல்லி இருந்தார்கள். ஆனால் அறை என் 305ல் கடவுள் படத்தில் மென்பொருள் வல்லுனர்களை கோமாளிகலாக்கி சந்தோஷமடையும் ஒரு வயித்தெரிச்சல் பிடித்த சைகோ இயக்குனரை கண்முன்னே பார்க்க முடிந்தது.

இவர்களின் பிரதான கருத்து மென்பொருள் வல்லுனர்கள், அளவுக்கு அதிகமாக சம்பாதிகிறார்கள் அது மட்டுமின்றி கையில் காசு அதிகம் இருப்பதால் இவர்கள் கண்முன் தெரியாமல் நடந்து கலாச்சார சீர்கேடையும் உண்டாகுகிறார்கள் என்பதே என்று எடுத்து கொள்வோம். தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே அளவுக்கும், திறமைக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் இருக்கும் துறை எது, கலாசார சீர்கேடை உண்டாக்கும் துறை எது, சீர்கேட்டிற்கு ஆணிவேராக விளங்கும் துறை எது என்று கேட்டால் இந்தியாவில் உள்ள பாமர மக்கள் கூட உடனே கை நீட்டுமளவுக்கு கேவலமான துறையாக விளங்குவது சினிமா துறை என்பது இவர்களுக்கு தெரியாதா? ஒன்று இரண்டு படம் நன்றாக ஓடிவிட்டால் இவர்கள் செய்யும் சேட்டைகள் இந்த தமிழகமே அறியும். படம் திரைக்கு வரும் வரை இவர்களின் அடக்கமான பேச்சும் அற்புதமான நடவடிக்கையுமாக திரியும் இவர்கள் இரண்டு படம் ஹிட் கொடுத்து விட்டால் இவர்களின் நடை உடை மற்றும் பேச்சு இவைகளை எப்படி மாற்றுவார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

இப்படி பட்ட கேவலமான துறையில் இருந்து கொண்டு மென்பொருள் வல்லுனர்களை பற்றி பேச இவர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது? அதுவும் இவ்வளவு அநாகரீகமாக காட்ட தூண்டியது என்ன? அந்த துறையை சேர்ந்தவர்கள் தங்கள் அறிவை பயன்படுத்தி நம் துறையை தாண்டி முன்னேரிசென்று விடுவார்களோ என்ற வயிதேரிச்சலா? இல்லை வருங்கால சினிமா அவர்களை நம்பித்தான் இருக்கிறது என்ற பயமா?

இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் தனது முந்தய படம் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக கொடுத்த சிம்பு தேவவனின் இந்த படத்திற்கான சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். மென்பொருள் வல்லுனர்கள் அதிகம் சம்பாதிக்க காரணமாக இருக்கும் அவர்களின் கைகளை குஷ்டரோகிகள் போல் சுருங்க செய்வது போன்ற காட்சி அமைத்து ஆனந்தம் அடைந்த திரு.சிம்பு தேவன் அவர்களின் எதை என்ன செய்து ஆனந்தமடயலாம் என்ற என்னத்தை அவர்கள் அவர்களின் கற்பனைக்கே நம் விட்டு விடுவோம். திரு சிம்பு தேவன் அவர்களே முதலில் நம் ____ய் சுத்தம் செய்வோம் பின்பு மற்றவர்கள் ___ய் நுகர்ந்து பார்போம்.

நன்றியுடன்
பாமர தமிழன்