Wednesday, December 17, 2014

பெஷாவர் தாக்குதலில் இருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

 
      
பெஷாவர் தாக்குதலுக்கு கண்டனமும், மக்களுக்கு ஆறுதலும் சொல்லிகொண்டிருக்கும் வேளையில், இதிலிருந்து இந்தியர்களாகிய நாம் கற்றுக்கொள்ள போவது என்ன? பல மதங்கள் சார்ந்த, பல இனங்கள் சார்ந்த மக்கள் வாழும் ஒரு நாட்டின் அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதமோ இனமோ சாராமல் மத சார்பற்ற நடுநிலை அரசாக செயல் பட்டாலே அனைத்து மக்களுக்கும் எந்த ஒரு பாகுபாடுமின்றி நன்மைகளை செய்ய முடியும். அப்படி பாகுபாடின்றி செயல்பட்டாலே மக்களுக்குள் விரிசலும், மோதலும் இன்றி அவர்களை காக்கவும் பேதமின்றி நீதி வழங்கவும் முடியும். மக்களும் தங்கள் மத, இன நம்பிக்கைகளை தங்கள் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளிய மனிதர்களாக வாழ்வார்கள். அவ்வாறின்றி நடுநிலை தவறி எதோ ஒரு இனத்தையோ எதோ ஒரு மதத்தையோ சார்ந்து, அதை போற்றும் அரசாக இருந்தால் பேதமின்றி நீதி வழங்க இயலாது. நீதி வழங்க இயலாத அரசு மக்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வது சாத்தியம் ஆகாது. மக்கள் அவரவர் மதம், இனம் சார்ந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்தி தங்களின் நம்பிக்கையே சிறந்தது என்று நிரூபிக்க வெறி கொண்டு கிளம்புவர். இதனால் எண்ணிப்பார்க்க இயலாத மோதல்களும், இழப்புகளும் மக்களுக்கு ஏற்ப்படும். அவ்வாறு பாகிஸ்தான் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழபின் ஒரு அங்கம் தான் பெஷாவர் தாக்குதலில் குழந்தைகளின் இழப்பு.

நம் நாட்டை மத சார்புடைய அரசு ஆளத்துவங்கியுள்ள இந்த  வேளையில் நாம் பாகிஸ்தானின் இழப்பிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? நாம் ஒரு மதமோ அல்லது ஒரு இனமோ சார்ந்த நாடா? நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் உங்கள் மதத்தையோ உங்கள் இனத்தையோ தவிர மற்ற மதத்தினரையோ இனத்தினரையோ விரட்டியடித்து விட்டு இங்கு நீங்கள் மட்டும் வாழ்ந்துவிட முடியுமா?  அனைவரும்  தோழமையுடன் வாழ்வதை தவிர்த்து வேறு வழி தேடினால் என்ன மாதிரியான எதிர்வினைகள் ஏற்ப்படும்? நம் நாட்டிற்கு எது உகந்தது?

மதசார்பற்ற நடுநிலை அரசு!

Thursday, November 13, 2014

நான்கு வகை மனிதர்கள் - நான்காம் வகை நாசமாய் போனவர்கள்

என் தொழில் சார்ந்த மனிதர்களை நான்கு வகையாக பிரித்துப் பார்க்கிறேன். 1) மாணவர்கள், 2) பண்டிதர்கள், 3) பண்டித மாணவர்கள், 4) மாணவ பண்டிதர்கள்.

1.       மாணவர்கள்: எப்பொழுதும் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உடையவர்கள். பரிச்சார்த்த முயற்ச்சிகளை செய்யத் தயங்காதவர்கள். (என் வாழ்நாள் முழுவதும் நான் இந்த வகையை செர்ந்தவனாகவே இருக்க விரும்புகின்றேன்.)

2.       பண்டிதர்கள்: இவர்கள் அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் நிலையை அடைந்தவர்கள். கற்றுக்கொள்ளும் நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு promotion பெற்றவர்கள். அறிவுரை கூறுபவர்கள். நம் வீட்டு பெரியவர்கள் போல் சற்று பழமைவாதம் பேசக்கூடியவர்கள். ஆனால் சாதனையாளர்கள்.

3.       பண்டித மாணவர்கள்: இது ஒரு உயர்ந்த நிலை. இவர்கள் பண்டிதர்களுக்கு இணையானவர்கள் ஆனால் மாணவத் தன்மையை இழக்காத்தவர்கள். கற்றுகொள்ளும் திறன் தங்களை விட்டு போகாது தக்கவைத்துகொள்பவர்கள். கடின உழைப்பும், புத்தி கூர்மையும் மட்டுமின்றி எப்பொழுதும் updatedஆக இருப்பார்கள். புது புது முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். இந்த வகையை சேர்ந்தவர்கள்  சரித்திரத்தில் முக்கியமான இடம் பிடிப்பார்கள்.

4.       மாணவ பண்டிதர்கள்: மாணவ நிலையில் இருக்கும்போழுதே தங்களை பண்டிதர்கள் என்று என்னிக் கொண்டிருப்பவர்கள். உலகில் அனைவருமே அறிவில் தங்களுக்கு கீழ் நிலையிலிருப்பவர்கள் என்று நினைப்பவர்கள். இவர்களிடம் வெட்டி ஜம்பம் அதிகமிருக்கும். அனைத்து விஷயங்களும் தங்களுக்கு தெரியுமென்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள். அடிக்கடி வெட்டி விவாதத்தில் ஈடுபடுபவர்கள். நான் பறந்த ஹெலிகாப்டருக்கு ஏழு வால் என்பவர்கள். இவர்களிடம் விவாதிப்பதை விட பழனி அடிவாரத்தில் போய் விபூதி விற்கலாம்.இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகம். எந்த மூலையிலும் இவர்களை காணலாம். 

மாணவ நிலையிலிருக்கும் எனக்கு பண்டிதர்களிடமிருந்தும், பண்டித மாணவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு. ஆதலால் இவர்களிடம் பணிவாகவும், பண்பாகவும் நடந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் இந்த மாணவ பண்டிதர்களை கண்டாலே உஷ்ணமாகி, ரட்சகன் நாகர்ஜுன போல் நரம்பு புடைகிறது. பின் BP Tablet போட்டு அடக்க வேண்டியிருக்கிறது. கடவுளென்று ஒருவன் இருக்கிறான் என்றால் அவரிடம் நான் வேண்டிக்கொள்வது கடவுளே என்னை இந்த மாணவப் பண்டிதப் பயகளிடமிருந்து காப்பாற்று."