Wednesday, January 6, 2010

தமிழ் சினிமாவும் திருட்டு வி.சி.டியும்


வெகுநாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.


இணையதளத்தில் "ஜக்குபாய்" படம் வெளியான விவகாரம்:


ஒரு தமிழ் திரைபடத்திற்கு திருட்டு வி.சி.டி. வெளிவருவது இது முதல் முறையல்ல. பின் ஏன் இந்த பரபரப்பு? படம் திரைக்கே வராத நிலையில் திருட்டு வி.சி.டி. வெளிவந்து இருப்பது தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரையுலகத்திற்கு கை நிறைய அள்ளித்தரும் வள்ளல் ஏன் இந்த விஷயத்தை எப்போதுமே கண்டுகொள்வதில்லை? அவரை பொறுத்தவரை திருட்டு வி.சி.டி தயாரித்து வெளியிடுபவர்களும் இந்நாட்டு ஓட்டுரிமை உள்ளவர்கள் தானே என்று தோன்றியிருக்கலாம். அல்லது திருட்டு வி.சி.டியை ஒழித்தால் மக்கள் அதிருப்தி அடைய வாய்ப்பிருக்கிறது என்று கருதியிருக்கலாம். நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கன்னடப்படங்களுக்கு திருட்டு வி.சி.டி வெளிவருவதே இல்லையே. தமிழ் நாட்டில் அதற்க்கு சட்டம் கடுமையாக இல்லையா?, அல்லது அது சரிவர செயல்படுத்தப்படுவது இல்லையா?

எது எப்படியிருந்தாலும், இந்த திருட்டு வி.சி.டியை ஒழிக்க என்னவழி?

ஒளிமயமான எதிர்காலம் சன் டிவியில் தெரிகிறது?
சன் பிக்சர்ஸ், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி போன்றோர் திரைப்படம் தயாரிக்க ஆரம்பித்த பிறகு திருட்டு வி.சி.டி. இனி மெல்லச்சாகும் என்று நம்புவோமாக.

நன்றி,
பாமர தமிழன்.