Thursday, October 23, 2008

தமிழக அரசியலின் அவல நிலை Part 2

மீண்டும் அரங்கேறியிருக்கிறது சினிமா துறையினரின் அநாகரீக அரசியல்

இப்போது இலங்கை தமிழர்களின் பிரச்சினையை முன்வைத்து அரங்கேறியிருக்கிறது அநாகரீக சினிமா கலைஞர்களின் அடாவடி பேச்சும் அனாவசிய ஊர்வலமும்.

தனது இயலாமையை மறைப்பதற்க்காக தமிழக மக்களை திசை திருப்ப தற்போதுள்ள அரசு செய்த ராஜினாமா நாடகத்திற்கு மக்களிடம் சரியான ஆதரவு இல்லாமல் போனது ஒரு பரிதாபம்.

அந்த தோல்வியை நேர் செய்ய எடுக்கப்பட்ட இரண்டாவது முயற்சியான இந்த சினிமா கலைஞர்களின் இராமேஸ்வர ஊர்வல நாடகமும் தோல்வியடைந்திருப்பது சரியான நகைச்சுவை.

இதில் எப்போதும் பரிதபதிற்குரியவர்கள் நமது சினிமா கலைஞர்கள் தான். அரசியல் ஆதாயதிர்க்காகவோ அல்லது அரசியல்வாதிகளின் கட்டாயத்தின் பேரிலோ சில சினிமா கலைனர்களின் இது போன்ற ஏற்பாடுகளால் நடுநிலையில் இருக்கும் மற்ற கலைஞர்களின் பாடு திண்டாட்டமென்றால், உண்மையான உணர்வோடு இவர்களுக்கு நடுவே சிக்கி கொள்ளும் சீமான் போன்ற கலைஞர்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியது.

இதற்கிடையில் மன்சூரலிகான் மற்றும் வடிவேலு போன்ற சில்லறை சிறுவர்களின் சிரிப்பு பேச்சால் சிறிதுகூட அர்த்தமற்றதாகிவிட்டது இந்த நாடகம். அதுவும் வடிவேலு நடிகர்களை பற்றி பேசினால் நமது நோக்கம் மாரிப்போகுமென்று கூறிவிட்டு விஜயகாந்துடனான தனது சொந்த பிரச்சினையை பேசி மேடையிலும் தனக்கு நகைச்சுவை செய்ய தெயரியுமேன்பதை நிரூபித்தார்.

இந்த அரசு இனியும் தனது இயலாமையை மறைக்க எடுக்க போகும் முயற்சிகளை காண ஆவலாய் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

துணுக்கு:
பாமரன்: இவங்க எத்தன தடவ நம்மளை மாத்தி மாத்தி ஏமாத்தினாலும் சரி ஏமாத்திட்டு போங்கடானும் வோட்டு போட்டு விட்டுடேன்.

படிச்சவன்: ஏன் வோட்டு போடுறீங்க சும்மா வீட்ல உக்காந்து T.V பாக்க வேண்டியது தானே.

பாமரன்: இல்லே அந்த தலைவருங்க சொன்னாங்க எவ்வளவு ஏமாத்தினாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவேவேவேவேவேன்னு சொல்லிடாண்டா...

நன்றி
பாமர தமிழன்

No comments:

Post a Comment