
தமிழக அரசியல் எவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது என்பதற்கு ஒரு சிரிப்பு நடிகரின் புகரும் அதை அதாரிக்கும் ஆளும்கட்சியுமே சாட்சி. சிரிப்பு நடிகர் தொலைகாட்சியில் இன்னொரு நடிகரும் எம்.எல்.ஏவுமான ஒருவரின் மீது சாட்டிய குற்றம் எவ்வளவு போலித்தனமானது என்பது அதை பார்த்த அனைவருக்கும் உணர்ந்திருக்கும்.
இது இவ்வாறு இருக்க இதை இவ்வளவு பெரிய விஷயமாக மாற்றி கைது வரை கொண்டு செல்ல முயல்வது ஆளும்கட்சியின் அரசியல் இயலாமையை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

அந்த சிரிப்பு நடிகர் ஒரு ரவுடி போல் சுற்றி திரிவது அவரை அருகமயிளிரிந்து கவனித்தவர்களுக்கு தெரியும். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் பிரவேசத்தை வெளியிட்டிருப்பது அவரின் பதவி ஆசையை காட்டுகிறது.
முகத்தில் ஒப்பனையிட்டவரெல்லாம் முதல்வர் நாற்காலியில் உக்கார ஆசை படுவது அவர்களின் குற்றமா? இந்த தமிழக மக்களின் குற்றமா? ஒரு வேலை நமக்கும் நடிக்க ஒரு வைப்பு கிடைத்தால் நம் மனதில் நாற்காலி ஆசை வந்துவிடுமோ என்ற எண்ணம் தோன்றும் வகையில் நம்மையே தூண்டுவது என்ன?
கண்டிப்பாக அது தமிழக மக்களின் அறியாமையே!
இவங்கள எத்தனை பெரியார் வந்தாலும் திருதமுடியதுட அப்பா!
நன்றி!
பாமர தமிழன்